பிக்பாஸ் சீசன் 3 மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர் நடிகை வனிதா. இந்நிகழ்ச்சிக்கு பிறகு சர்ச்சை நடிகையாக வலம் வந்தார்.
இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மற்றும் காமெடி ஷோவில் நடுவராக பணியாற்றி வந்தார்.
இதனைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் சீரியலில் கௌரவ தோற்றத்தில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் நடிகை அம்பிகா மற்றும் அமித் உப்பட இன்னும் சின்னத்திரை முன்னணி நடிகைகளும் இதில் நடித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் புதிய ஹீரோயினையும் அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.
இந்நிலையில் நடிகை வனிதா நடிகை அம்பிகா மற்றும் மற்ற நடிகைகளுடன் ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.
