இந்த நடிகர் தான் என்னை துரத்தி துரத்தி காதலித்தார்.! பிக்பாஸ் வனிதா ஒரே போடு

சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார் இவர் நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளாவின் மகளாவார். விஜய் நடிப்பில் வெளியாகிய சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என பல மொழி திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

பின்பு 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டார் பின்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2005ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்கள்.பின்பு மீண்டும் வனிதா அவர்கள் இரண்டாவது திருமணமாக ராஜன் ஆனந்த் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர்கள் 2010 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து தற்பொழுது தனிமையில் வாழ்ந்து வருகிறார். தற்பொழுது வனிதாவுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் இவர்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார் வனிதா. சமீபத்தில் இவர்களின் குடும்ப பிரச்சனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வனிதா அவர்கள் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 3 கலந்துகொண்டு பிரபலமடைந்தார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பொழுதுஅனைத்து பார்வையாளர்களுக்கும் வில்லியாக தான் தெரிந்தார் வனிதா. இவர் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே கடைசிவரை பார்வையாளர்கள் வெறுப்பை சம்பாதித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா குக் வித் கோமாளி மற்றும் சீரியல் ஆகியவற்றில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் என்று வனிதா விஜயகுமார் தன்னுடைய இளம் வயதில் நடந்த காதல் அனுபவம் பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது எனக்கு என்னுடைய 14 வயதில் காதல் அனுபவம் தொடங்கியது. அப்பொழுது போர்த் ஸ்டாண்டர்ட் பையன் ஒருவன் என்னை துரத்து துரத்தி காதலித்தான். இதை சொல்லும்போது எனக்கு சிரிப்புதான் வருகிறது எங்கள் வீட்டில் சொல்லும் பொழுது அனைவரும் ஷாக் ஆனார்கள். அவன் தற்பொழுது இளமையான துறுதுறு பையன் என்றும் பதினாறு தான் அவன்.

தற்பொழுது கூட அவன் சினிமா துறையில் தான் இருக்கிறான் அவன் யாரென்று நான் சொல்ல விரும்பவில்லை எனக்கு வந்த முதல் காதல் அதுதான் அதன் பிறகு நாங்கள் பல வருடம் கழித்து நண்பர்களாக மாறி விட்டோம் அது காதல் என்று சொல்லமுடியாது பப்பி லவ் என்றுதான் சொல்ல வேண்டும். இவர் இவ்வாறு கூறியது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment