காதலித்து கல்யாணம் பண்றது எனக்கு அல்வா சாப்பிடற மாதிரி.! 4வது திருமணத்திற்கு வெயிட் பண்ணுவதாக கூறும் நடிகை வனிதா..

vanitha
vanitha

மூன்றாவது கணவர் இறந்து ஒரு மாதம் கூட ஆகாமல் இருந்து வரும் நிலையில் தற்போது நான்காவது காதல் குறித்த வனிதா அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை வனிதா விஜயகுமார் தற்பொழுது தொழிலதிபராக கலக்கி வருகிறார்.

விஜயகுமாரின் மகளாக சினிமாவிற்கு அறிமுகமான இவர் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு சில  திரைப்படங்கள் மட்டுமே நடித்து நிறுத்திய நிலையில் இதனை அடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. இந்த நேரத்தில் தனது தந்தையுடனும் பிரச்சனை ஏற்பட்டதனால் தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.

இவ்வாறு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த நிலையில் இந்நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து சீரியல்கள் மற்றும் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார். அந்த வகையில் காத்து என்ற படத்தில் நடனமாடி இருக்கும் நிலையில் இதனைத் தொடர்ந்து அனல் காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் ட்ராப் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் நிலையில் அதில் தொடர்ந்து ஏராளமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார். எனவே லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை கடந்த ஆண்டு தொடங்கியுள்ளார்.

இவ்வாறு பல தொழில்களில் கவனம் செலுத்தி வரும் வனிதா சமீபத்தில் திருப்பதிக்கு சென்று இருந்தார் அங்கு செய்தி வாசிப்பாளர்களை சந்தித்த வனிதா தமிழில் நான் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன் அந்த படங்கள் வரிசையாக திரைக்கு வர இருக்கிறது. தற்பொழுது நான் தெலுங்கில் நடித்த மல்லி பெல்லி படம் திரைக்கு வந்து இருக்கிறது.

திரையில் என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ்க்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனா நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் ஆண்டவன் அருளால் எனக்கு திரும்பவும் யார் மீது வேண்டும் என்றால் காதல் ஏற்படலாம். அப்படி நடந்தால் என் வாழ்க்கையில் சரியான முடிவு எடுப்பேன் என்று கூறியிருக்கிறார் இவ்வாறு மூன்றாவது கணவர் பீட்டர் பால் மறைந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகாமல் இருந்து வரும் நிலையில் நான்காவது கணவருக்கு அடிபட்டிருக்கிறார் வனிதா என ரசிகர்களால் கழுவி ஊற்றி வருகின்றனர்.