விஜய் டிவியில் நடக்கும் தில்லு முல்லுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வனிதா விஜயகுமார்.. !! என்ன தைரியம்…

0

வெள்ளித்திரையில் நடித்து அதன் பிறகு சரியாக திரைப்படங்களின் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் பல வருடங்கள் திரைவுலகில் தலை காட்டாமல் இருந்து அதன் பிறகு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்தார் நடிகை வனிதா விஜயகுமார்.

இவர் விஜய் உள்ளிட்ட இன்னும் சில முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு சொல்லுமளவிற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டுவிட்டு மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தி வந்தார். இப்படிப்பட்ட நிலையில் பல வருடங்கள் கழித்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ என்ட்ரி கொடுத்தவர்.

இவரின் மீது சர்ச்சைகள் பலவற்றை சுற்றிக்கொண்டே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் சக போட்டியாளர்கள் உடன் ஏதாவது ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி அவர்களிடம் சண்டை போட்டுக்கொண்டே இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தாலும் நேகட்டியு பெயர்தான் கிடைத்தது. இப்படிப்பட்ட நிலையில் ஏற்கனவே 2 முறை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்ற இவர் திடீரென்று பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமண பந்தமும் நீண்ட நாள் நீடிக்க முடியவில்லை ஏனென்றால் பீட்டர் பால் ஒரு குடிகாரன் என்பதால் வனிதா தனது வீட்டைவிட்டு துரத்திவிட்டார். இந்நிலையில் எதுவும் வேண்டாம் என்று தனியாக வாழ்ந்து வரும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் வைத்து பிபி ஜோடிகள் என்ற  ஒரு டான்ஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்த வனிதா சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் தன்னை அவமானப்படுத்துவதாகும், பாலியல் சீண்டல்கள் ஆனதாகவும் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். எனவே நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாகவும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

இவ்வாறு இவரின் இந்த தைரியத்தை பார்த்து பலரும் பாராட்டி வருகிறார்கள். அந்தவகையில் ரசிகர் ஒருவர் பாராட்டிற்கு வனிதா பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் பெண்களே ஏன் துணை நிற்க வேண்டும் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ள வேண்டும் எனவும் நோ மீம்ஸ் நோ எனக் குறிப்பிட்டுள்ளார்.