பிபி ஜோடியிலிருந்து வனிதா விஜயகுமார் திடீரென வெளியேற இதுதான் காரணம்.!! இதுக்கு மேலயும் தாங்க முடியாது…

0

பொதுவாக சினிமா என்றால் தனது சிறந்த நடிப்பை மட்டும் வெளிப்படுத்தினால் மட்டும் போதாது கொஞ்சம் தந்திரமும் தெரிந்தால் தான் தொடர்ந்து சினிமாவில் முன்னணி நடிகர், நடிகைகளாக நிலைத்திருக்க முடியும்.  ஆனால் இது தெரியாமல் பலரும்  சில படங்களில் மட்டுமே நடித்து விட்டு சினிமாவை விட்டு விலகியவர்கள் பலர் உள்ளார்கள்.

அந்தவகையில் ஆரம்ப காலத்தில் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு வெளியேறியவர் தான் நடிகை வனிதா. இவர் தனது முதல் படத்திலேயே தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். ஏனென்றால் வனிதா பிரபல மூத்த நடிகரான விஜயகுமாரின் மகள் என்பதால் அவருக்கு தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் இவரின் நடிப்பு பெரிதாக பிரபலம் அடையவில்லை.

அதன் பிறகு சில வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவிற்கு சின்னத்திரையின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார். அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இந்நிகழ்ச்சியின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் பொருளாக மாறினாலும் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும், போட்டியாளராகவும் கலந்துகொண்டு மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்துள்ள இவர் சமீபத்தில் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

அதாவது வனிதாவிடம் இதனைப் பற்றி கேட்டதற்கு என்ன கூறியுள்ளார் என்பதை பார்ப்போம். இந்த நிகழ்ச்சியில் எனது வளர்ச்சியை பிடிக்காதவர்கள் செய்யும் செயல்களால் நான் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகிறேன். பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு நான் குக் வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பணியாற்றி வந்தேன் அதோடு நிகழ்ச்சியின் மூலம் ஏற்படும் தாக்கங்களையும் அனைவரும் உணர வேண்டும் என்று நினைத்தேன்.

இவ்வாறு அனைத்தும் சரியாக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் பணியாற்றும் இடத்தில் தம்மை தரக்குறைவாகவும் இழிவு படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.  ஆண்களையும் தாண்டி பெண்களும் பொறாமையின் பெயரில் கொச்சைப்படுத்தும் வகையில் தொடர்ந்து நடந்து வருகிறார்கள்.

vanitha 08
vanitha 08

இந்நிகழ்ச்சியில் எனக்கு ஜோடியாக நடனமாடிய சுரேஷ் சக்கரவர்த்தி ஒரு நல்ல பார்ட்னராக இருந்தார் என்னை மன்னித்து விடுங்கள் சுரேஷ் என்னுடைய முடிவால் இனி நிகழ்ச்சிகள் நீங்களும் தொடர முடியாமல் வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது என்று வனிதா பதிவிட்டுள்ளார். என்னதான் வனிதா சர்ச்சை நடிகையாக இருந்தாலும் இவரை சுற்றி எப்பொழுதும் பிரச்சனை இருந்து வருவதால் இவரின் ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.