இந்த போட்டியில் நீ ஜட்ஜா இல்ல நான் ஜட்ஜா..? போட்டி முடிந்தவுடன் ஜட்ஜ் போல கமெண்ட் செய்து பல்பு வாங்கிய நடிகை வனிதா.!

0

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன அதில் ரசிகர்களுக்கு பிடித்த ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் அந்த பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து பிக் பாஸ் ஜோடி என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள் அந்த நிகழ்ச்சியில்  இருந்து நடிகை வனிதா வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது இந்நிலையில் இதை பற்றிய அறிக்கை ஒன்று  நடிகை வனிதா வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியது என்னவென்றால் ஒருவர் கிண்டல் செய்யப்படுவதையும் துன்புறுத்தப் படுவதையு என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது அது என்னுடைய குடும்பத்தாராக இருந்தாலும் சரி பொதுவாக விஜய் டிவி தான் எனக்கு பட வாய்ப்புகளைக் கொடுத்து பிரபலமாக்கியது. ஆனால் அதில் என்னுடைய வளர்ச்சி தாங்க முடியாத ஒருவர் எனக்கு தொல்லை கொடுத்து அவமான படுத்தி உள்ளது வருந்தத்தக்க செயலாக உள்ளது.

அந்தவகையில் கடுமையாக உழைத்து முன்னேறி வரும் என்னை தாழ்த்தி பார்ப்பதும் அவமானப்படுத்துவது வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது. அது மட்டும் இல்லாமல் கணவர் இல்லாமல் குடும்பம் இல்லாமல் மூன்று குழந்தைகளை வைத்துக்கொண்டு முன்னேற நினைக்கும் ஒரு பெண்ணிற்கு ஒரு பெண்தான் ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால் நடப்பது எல்லாம் எதிர்மறையாக இருக்கிறது.

இவ்வாறு வனிதா கூறியதன் காரணமாக அந்த அனுபவம் வாய்ந்த பெண் ரம்யா கிருஷ்ணன் தான் என பலரும் கூறி உள்ளார்கள் இதற்கு விளக்கம் அளித்த நடிகை ரம்யா கிருஷ்ணன்  வனிதா தான் ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் என்ன நடந்தது என அவரிடமே கேளுங்கள் என்று கூறியுள்ளார்.

vanitha-1
vanitha-1

அது மட்டும் இல்லாமல் என்னை பொறுத்தவரை இது எல்லாம் ஒரு விஷயமே கிடையாது மேலும் இதுபற்றி நான் ஏதேனும் சொல்ல வேண்டுமென்றால் அதற்கு நோ கமெண்ட்ஸ் தான் என ஒரே வார்த்தையில் ரம்யாகிருஷ்ணன் கூறியுள்ளார் இந்நிலையில்  பஸ் ஜோடி நிகழ்ச்சியில் காதல் பாடலுக்கு போட்டியாளர்கள் நடனமாடி உள்ளார்கள்.

அப்போது பாலாஜி மற்றும் நிஷா ஆடி முடிந்தவுடன் வனிதா மைக்கை எடுத்துக்கொண்டு கமெண்ட் சொல்ல ஆரம்பித்துவிட்டார். உடனே பாலாஜி இந்த நிகழ்ச்சியில் ஜட்ஜ் யாருன்னு தெரியலையே யார் யாரோ கமெண்ட்ஸ் சொல்றாங்க என கூறியிருந்தார் இதற்கு ரம்யா கிருஷ்ணன் விழுந்து விழுந்து சிரித்து விட்டார் பின்னர் வனிதா பழக்க தோஷத்தில் ஏதோ பேசிட்டேன் என கூறியுள்ளார்

vanitha-2
vanitha-2