சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பை இழந்ததால் தன்னுடைய காதலரை கழட்டி விட்ட நடிகை வாணி போஜன்.!

சின்னத்திரையில் தொடர்ந்து ஏராளமான சீரியல்களை நடித்து பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியலின் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் நடிகை வாணி போஜன். தற்பொழுது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார் மேலும் தற்பொழுது முன்னணி நடிகைகளை ஓவராக செய்யும் அளவிற்கு ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்து திரைப்பட நடித்து வரும் இவருடைய சில திரைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கிறது மேலும் இவர் வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் இவரை எந்த இயக்குனராலும் கதை சொல்ல முடியவில்லை எனவும் தொடர்ந்து இவர் காதல் மயக்கத்தில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏனென்றால் இவர் நடிகர் ஜெய் உடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது இவ்வாறு 24 ஹவர்ஸ் ஒன்றாக இருந்து வருவதால் வாணி போஜனை யாராலும் அணுக முடியவில்லை இதன் காரணமாகத் தான் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் நழுவி வருவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு தொடர்ந்து இருந்து வருவதால் இதனை தெரிந்துக் கொண்ட வாணி போஜன் இதற்கு மேல் திரைப்படங்களின் வாய்ப்புகளை நழுவ விடக்கூடாது என ஜெயுடன் இருக்கும் உறவை முடித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளாராம். இதனை தன்னுடைய சோசியல் மீடியாவில் சுமூகமாக தெரிவித்துள்ளார் அதில் அவர் கூறியதாவது சினிமா மட்டும் தான் முக்கியம் வேறு யாரும் கிடையாது நான் உஷாராகி விட்டேன் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மறைமுகமாக இவர் ஜெய்யை பற்றி தான் கூறியுள்ளார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். நடிகர் ஜெய் இதற்கு முன்பு நடிகை அஞ்சலியை காதலித்து அவருடைய மார்க்கெட்டை காலி செய்தார் பிறகு குடிப்பழக்கத்திற்கு காரணமானதால் தற்பொழுது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வருகிறார் அடுத்ததாக வாணி போஜனை குறி வைத்தும் அதிலிருந்து வாணி போஜன் தப்பித்துள்ளார்.

Leave a Comment