சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் வந்தவர் வாணி போஜன் இவரை ரசிகர்கள் அனைவரும் செல்லமாக சின்னதிரை நயந்தாரா என அழைப்பது வழக்கம் இவர் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் மேலும் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு அசத்துவதால்..
இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வருடத்தில் கூட இன்னும் ஏழு எட்டு திரைப்படங்களில் நடித்து ஓடுகிறார். அந்த வகையில் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒலி நீ எனக்கு, நிரல், நவீன் சந்திராவுடன் ஒரு படம், லவ், ஊர் குருவி, கொலைக்கார கைரேகைகள் என பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் பல வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் இப்பொழுது முதல்முறையாக நடிகர் அருண் விஜய் உடன் கைகோர்த்து தமிழ் ராக்கர்ஸ் என்னும் வெப் சீரிஸில் நடித்துள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த படம் குறித்தும் தன்னுடைய சினிமா பயணம் குறித்தும் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
இது குறித்து பேசிக் கொண்டிருக்கையில் உங்களுடைய முதல் பிரேக் அப் எது என கேட்டனர் அதற்கு வாணி போஜன் சொன்னது. தனக்கு 16 வயது இருக்கும்போதே காதல் வந்ததாகவும்.. உடனே பிரேக் அப் ஆனது ஆனால் அந்த சமயத்தில் எனக்கு நிறைய காதல் கடிதங்கள் வரும் ஆனால் பிரேக் அப் ஆனதற்கு பிறகு அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை..

பிறகு தொகுப்பாளர் கேள்வி கேட்டது முதல் முத்தம் எப்போது கொடுத்தீர்கள் என கேட்டதற்கு 16 வயதிலேயே நான் கொடுத்து விட்டேன் எனவும் கூறினார். இதை அறிந்த ரசிகர்கள் அதனை இவ்வளவு ஓபன்னாகவா வாணி போஜன் பேசிவீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.