மஞ்சள் உடையில் மங்களகரமான போஸில் வந்தனா..! இணையத்தில் டிரண்டிங்காகும் புகைப்படம் இதோ..!

0

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் என்ற சீரியலின் மூலம் டெல்லி குமாருக்கு மகளாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை வந்தனா. இவ்வாறு இந்த சீரியலில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளி காட்டியதன் மூலமாக வந்தனாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் திரண்டு விட்டார்கள்

மேலும் இந்த சீரியலை தொடர்ந்து ரெக்ககட்டி பறக்குது, செல்லமே, கல்யாணம் முதல் காதல் வரை போன்ற பல்வேறு சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை வெளிக்காட்டிய வந்தனா ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகி விட்டார்.

இதை தொடர்ந்து சமீபத்தில் நிறைவடைந்த தங்கம் சீரியலில் கூட ரம்யா கிருஷ்ணனுடன் வில்லியாக நடித்திருப்பார்.  இதற்கு முன்பு நமது நடிகை பல சீரியலில் நடித்து இருந்தாலும் இந்த சீரியல் அவருக்கு பெருமளவிற்கு பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை மைக்கேல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு இவர்களின் திருமணத்திற்கு பிறகு  தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த நமது தம்பதியர்கலுக்கு திருமணத்துக்கு பிறகும் வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது.

பொதுவாக ஒரு நடிகைக்கு சினிமாவில் மவுசு குறைந்து விட்டால் வாய்ப்புகளும் குறைந்துவிடும் இதற்காக நடிகைகள் கையாள்வது ஒரே ஒரு விஷயம்தான் அது என்னவென்றால் சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும் இயக்குனர்களையும் கவர்ந்து விடுவார்கள்.

இதனால் அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நப்பாசைதான் இவர்கள் இப்படி செய்கிறார்கள்.  தற்போது இந்த யுத்தியை நமது நடிகை வந்தனாவும் கையில் எடுத்துள்ளார் அந்த வகையில் குட்டையான உடையில் ஸ்கூட்டியில் அமர்ந்து கொண்டு அவர் வெளியிட்ட புகைப்படம் ஆனது இன்று சமூக வலைதளப் பக்கத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

vandhana-1
vandhana-1