சினிமாவிற்கு அறிமுகமாக இருக்கும் சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் இன்ஸ்டாகிராமில் தங்களுடைய புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் இதன் மூலம் இவர்களுக்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகிவிடுகிறது அதோடு மட்டுமல்லாமல் இதன் மூலம் தனி ஒரு சம்பாதித்தையும் பெற்று வருகிறார்கள்.
அந்த வகையில் சின்னத்திரையின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித் திரையில் அடுத்தடுத்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் முக்கிய நடிகை தான் வாணி போஜன். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியலில் சத்யாவாக நடித்து பட்டித்தொட்டி இயங்கும் பிரபலமடைந்தார் மேலும் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்தார்.
தெய்வமகள் சீரியலில் மட்டுமல்லாமல் தொடர்ந்த அடுத்தடுத்து சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு அசோக் செல்வன், ரித்திகா சிங் ஆகியோர்களின் நடிப்பில் உருவான ‘ஓ மை கடவுளே’ என்னும் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது இதன் மூலம் வெள்ளி திரைக்கு அறிமுகமானார்.
இந்த படத்தினை தொடர்ந்து பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும்மொளி நீ எனக்கு, தாழ் திறவாய், ஊர் குருவி, காசிமேடு உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களிலும் நடித்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரியலிலும் இடம் பெற்றிருந்த இவருடைய நடிப்பு ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது. மேலும் இந்த சீரியலில் சைபர் போலீசாக நடித்து மிரட்டி இருந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக தொடர்ந்து தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவ்வாறு 12 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு இவருக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்திருக்கிறது அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் 23 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஹோமிலியாகவும், கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது பட்டுப் புடவையில் ரசிகர்களை கவரும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
