உருட்டி வைத்த வெண்ணெய் போல் கொழுக்கு மொழுக்குன்னு இருக்கும் ஊர்வசியின் மகளைப் பார்த்து உள்ளீர்களா…

Actress  urvashi daughter photo:  ஏராளமான சினிமா பிரபலங்கள் தாங்கள் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுதே தங்களது வாரிசுகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி பிரபலமடைய செய்து வருபவர்கள் பலர் இருக்கின்றனர். இவ்வாறு இந்த பிரபலங்களுக்காக இயக்குனர்களும் அவர்களுடைய வாரிசுக்கு வாய்ப்புகளை தந்து வருகிறார்கள்.

இந்த சூழலில் சில பிரபலங்கள் மட்டுமே தங்களுடைய வாரிசுகளை சினிமா மற்றும் வெளி உலகத்திற்கு வெளிகாட்டாமல் இருந்து வருகிறார்கள். அப்படி ஊர்வசி தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை முதன்முறையாக சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். கேரளாவை பூர்விகமாகக் கொண்ட நடிகை ஊர்வசி குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழில் கே பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான முந்தானை முடிச்சு படத்தின் மூலம் ஹீரோயின் ஆக சினிமாவில் நடிக்க தொடர்ந்தார். இந்த படத்தின் வெற்றினை தொடர்ந்து அபூர்வ சகோதரி, நெருப்புக்குள் ஈரம், ஓ மானே மானே, அம்பிகை நேரில் வந்தால், அன்பே ஓடிவா என அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்தார்.

urvashi
urvashi

அப்படி 90 காலகட்டத்தில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தந்து ரசிகர்களின் கனவு கனியாக வலம் வந்த ஊர்வசி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பலமொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். வயதான காரணத்தினால் ஹீரோயின் ஆக நடிக்கவில்லை என்றாலும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்தவரும் ஊர்வசி கடந்த 2000ஆம் ஆண்டு மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.

urvashi
urvashi

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது ஆனால் மனோஜ் மற்றும் ஊர்வசிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2008ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். குஞ்சட்டா என்ற மகள் இருந்த நிலையில் மகளை மனோஜ் அழைத்துக்கொண்டார். அதன் பிறகு மனோஜம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

urvashi
urvashi

அதேபோல் ஊர்வசியும் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சிவ பிரசாத்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். எனவே தனது 46 வயதில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் இந்நிலையில் தனது முன்னாள் கணவருடன் இருந்து வந்த ஊர்வசியின் மகள் குஞ்சட்டா தற்பொழுது வளர்ந்திருக்கும் நிலையில் அவருடன் இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் ஊர்வசி.