முந்தானை முடிச்சி படத்துல நடிச்ச கவர்ச்சி குயின் உன்னி மேரியை ஞாபகம் இருக்க.. அவுங்க இப்போ எப்படி இருகாங்க பாருங்கள்.! வைரல் புகைப்படம்.

சினிமா பொருத்தவரை ஹீரோ, ஹீரோயின் மற்றும் வில்லன் தான் தனது கதாபாத்திரங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைவதோடு அடுத்தடுத்த பட வாய்ப்பையும் கைபற்றி விடுகின்றனர்.  ஆனால் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் காணாமல் போய் விடுகின்றனர்.

ஆனால் சமீபகாலமாக குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பவர்களும் ஹீரோவுக்கு இணையாக பிரபலம் அடைகின்றனர்.

அதற்கு காரணம் மீடியா சினிமாவில் பின்புறம் நடிப்பவர்களையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

80, 90 காலகட்டங்களில் மீடியா மிகப்பெரிய அளவில் இருந்திருந்தால் பல குணச்சித்திர கதாபாத்திர நடிகர் நடிகைகள் பலரும் தற்போதும் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து இருக்க முடியும் என்பது நாம் யாரும் மறுக்க முடியாத ஒன்று.

தமிழ் சினிமாவில் 90 கால கட்டத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமான நடிகை உன்னி மேரி.  கவர்ச்சிக்கு பெயர் போன நடிகையாகவும், குணச்சித்திர நடிகையாகவும் வலம் வந்தவர். எந்த ஒரு கதாபாத்திரத்திரமாக இருந்தாலும்  அசாதாரணமான திறமையை வெளிக்காட்டி நடித்தார்.

அதில் ஒன்று தான் இவர் நடித்த முந்தானை முடிச்சு படம். இப்படம் பலரையும் கட்டி இழுத்தது பாக்யராஜ் இயக்கத்தில் நடிப்பில் உருவான திரைப்படம்.

முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜ்க்கு ஜோடியாக ஊர்வசி நடித்திருந்தார். கவர்ச்சி ரோலில் உன்னி மேரி  மற்றும் பல டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் பாக்யராஜ், ஊர்வசி நடிப்பு மிக சிறப்பாக இருந்தாலும் கவர்ச்சியில் உன்னி மேரி பின்னி பெடலெடுத்து இருந்தார். இந்த படத்தை அவருக்காகவே  ரசிகர்கள் கூட்டம் வந்து திரையரங்கில் பார்த்தனர் அந்த அளவிற்கு ரசிகர் பட்டாளத்தை தன்வசப்படுத்தி இருந்தார். பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த உன்னி மேரி ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்தார்.

அவ்வபோது பட வாய்ப்புகள் தேடி வந்தாலும் அதை எல்லாம் உதறித் தள்ளி விட்டு தனது குடும்பத்தையே பெரிதும் கவனித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் அவர் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் இணையதள பக்கத்தில்  பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த நீங்கள் இப்படி ஆகிடிங்க எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

unni marry
unni marry

Leave a Comment