தமிழ் சினிமாவில் தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் சோலோ ஹீரோயினாகவும் முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார் நடிகை திரிஷா.
சினிமா உலகில் 19 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் திரிஷாவுக்கு இன்னும் சில வருடங்கள் நல்ல எதிர்காலம் இருக்கும் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர் மேலும் தமிழிலும் மற்ற மொழிகளிலும் நல்லதொரு வரவேற்பை தக்க வைத்துள்ளார்.
இவர் நடிப்பில் கடைசியாக வந்த பரமபதம் நல்லதொரு வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவர் கையில் மேலும் பல படங்கள் கைவசம் இருக்கின்றன அந்த வகையில் கர்ஜனை, சதுரங்க வேட்டை 2 பிராங்கி, சுகர், 1818 ஆகிய படங்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் என்ற திரைப் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் இளம் வயதில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணைய தளப்பக்கத்தில் ஷேர் செய்து இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அப்போது எப்படி இருந்தீர்களோ அது போலவே தற்போதும் உங்க முகம் பளிச்சென்று குழந்தை முகம் போல இருக்கிறது என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.


