படப்பிடிப்பு தளத்தின் வீடியோவை வெளியிட்ட நடிகை த்ரிஷா.! அதுவும் எந்த படப்பிடிப்பு தளம் தெரியுமா.?

தமிழ் திரை உலகமே திரும்பிப் பார்க்கும் படியாக வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்தையும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டு ரசிகர்களை பொன்னியின் செல்வன் படக்குழு கவர்ந்து விட்டது.

அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தில் நடித்த பல பிரபலங்களும் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்கள் குறிப்பாக கூற வேண்டும் என்றால் இதில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த நடிகை த்ரிஷா அவர்கள் ரசிகர்களின் நெஞ்சை தொட்டுவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

இந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்திலும் இவரது நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது என பல பிரபலங்களும் கூறினார்கள்.இவர் மட்டும்தான் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என இயக்குனர் மணிரத்னம் அவர்கள் நடிகை த்ரிஷா அவர்களை நடிக்க வைத்து விட்டார்.

மேலும் இந்த இரண்டாம் பாகத்திற்காக இதில் நடித்த பல பிரபலங்களும் பல நகரங்களுக்கு சென்று வந்தார்கள். அப்பொழுது அவர்கள் எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை நாம் சமூக வலைதள பக்கங்களில் பார்த்திருக்கலாம் இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் எப்படி இருந்துள்ளார் என்பதை ஒரு வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் படப்பிடிப்பு தளத்தில் நடிகை த்ரிஷா மிகவும் அழகாக இருக்கிறார் என இவரை வர்ணித்து கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து நடிகை த்ரிஷா இதில் மிகவும் அழகாக இருக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment