வயது ஆக ஆக அழகு கூடிக்கொண்டே போகுதே..! திரிஷா செல்பி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள்.!

0

பொதுவாக நடிகைகள் என்றால் அதிகபட்சமாக தொடர்ந்து பத்து வருடங்கள் மட்டுமே அவர்களால் முன்னணி நடிகையாக வலம் வர முடியும். இவர்களின் இளமை குறைந்துவிட்டால் ரசிகர்களும் அவர்களை பெரிதாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக ஜொலிக்க வருபவர் தான் நடிகை திரிஷா.

இவர் தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இடையில் திரைப்படங்களில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் தள்ளாடி வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். இத்திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்ததால் தற்போது மீண்டும் சினிமாவில் தொடர்ந்து நடித்து ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது உள்ள இளம் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தங்களது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியீடுவது மற்றும் ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவது என சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது லாக் டவுன் காரணத்தினால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் திரிஷா ஒவ்வொரு நாளும் வித்தியாசமான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

trisha 10
trisha 10

அந்த வகையில் தற்பொழுது இவர் ஹேர் கட் செய்துள்ளார் இதன் காரணமாக தனது புது ஸ்டைலை ரசிகர்களிடம் காட்ட செல்பீ ஒன்றை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஹேர்கட் சூப்பர், எவர் க்ரீன் ஹீரோயின்,  வயது ஆக ஆக அழகு கூடிக்கொண்டே போகிறது என்றெல்லாம் ரசிகர்கள் புகழ்ந்து உள்ளார்கள்.

அதோடு சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் எந்த அளவிற்கு அழகாக இருந்தாரோ அதே போலவே தற்போதும் அழகாக இருந்து வருகிறார் உங்கள் அழகுக்கு என்ன ரகசியம் என்று சொல்லிவிடுங்கள் திரிஷா என சிலர் கேட்டுள்ளனர்.  அந்த வகையில் இதற்கு விரைவில் திரிஷா பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.