கமலின் நடிப்பை பார்த்து மிரண்டு போன நடிகை திரிஷா – “விக்ரம்” படத்தை இத்தனை முறை பார்த்துள்ளாரா..

தமிழில் சமீபத்தில் வெளிவந்த டாப் நடிகர்களின் படங்களான விஜயின் பீஸ்ட் அஜித்தின் வலிமை சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்கள் மக்கள் எதிர்பார்த்தபடி அமையாததால் சுமாரான வெற்றியைப் பெற்று ஓடியது. ஆனால் கன்னட படமான கேஜிஎப் 2 தெலுங்கு RRR போன்ற படங்கள் சிறப்பாக இருந்ததால் தமிழ் மக்கள் கூட அதிகம் இந்த படத்தை கொண்டாடி வந்தனர்.

மேலும் இந்த படங்கள் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனையும் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் மூன்றாம் தேதி வெளியாகியது.

இந்த படத்தில் கமலுடன் இணைந்து சூர்யா, விஜய் சேதுபதி, நரேன், பகத் பாசில் போன்ற பலரும் நடித்திருந்தனர். விக்ரம் படம் அண்மையில் வெளிவந்து பீஸ்ட் வலிமை திரைப்படங்கள் போல் இல்லாமல் விக்ரம் திரைப்படத்திற்கு மக்கள் பலரும் பாசிட்டிவான கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தை திரையரங்கில் காண நாளுக்கு நாள்  ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றன மேலும் சினிமா பிரபலங்களும் இந்த படத்தை திரையரங்கில் கண்டு அவர்களது கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா.

நேற்று விக்ரம் படத்தை சென்னையில் உள்ள ஏஜிஎஸ் சினிமா தியேட்டருக்கு சென்று பார்த்து இருக்கிறார். அந்த திரையரங்கில் திரிஷா இரண்டு முறை படம் பார்த்ததாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் மேலும் அதற்காக ஏஜிஎஸ் கல்பாத்திக்கு நன்றியும் கூறியுள்ளார்.

trisha
trisha
trisha
trisha

Leave a Comment