லியோ வெற்றி விழாவில் விடாமுயற்சி அப்டேட் கொடுத்த நடிகை த்ரிஷா.? இது போதும் எங்களுக்கு..

Leo success meet trisha speech : ஜெயிலர், ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக லியோ திரைப்படம் வெளியானது. மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு படத்தை பார்த்தனர் அதனால் வசூலிலும் எந்த குறையும் வைக்கவில்லை..

இதுவரை மட்டுமே சுமார் 490 கோடிக்கு மேல் வசூல் அள்ளி இருப்பதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் சந்தோஷம் அடைந்த லியோ டீம் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நவம்பர் 1ஆம் தேதி வெற்றி விழாவை நடத்தியது.

அசிங்கப்பட்ட கூல் சுரேஷ்.. முதன்முறையாக பிக் பாஸ் சீசன் 7-ல் ஜெயிலுக்கு சென்ற அக்ஷயா.! கெடுபுடி காட்டும் பிக் பாஸ்..

இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார், அர்ஜுன், மன்சூர் அலிகான் மற்றும் பல முன்னணி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இதில் மேடை ஏறிய திரிஷா.. நல்ல வேலை இந்த படத்தில் ஹரால்டு தாஸ் மூலமாக லோகேஷ் கனகராஜ் என்னை கொள்ளவில்லை. லியோ 2 – வில் விஜயுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு உள்ளது.

இன்னமும் எனக்கு விஜய் காரப்பெரி வாங்கி தரவில்லை என கூறினார் மேலும் பேசி அவர் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிப்பது பழைய ஸ்கூல் பிரண்டுடன் கெட்டு கெதர் சென்றது போல் என கூறினார். சத்யா கதாபத்திரத்தை லோகேஷ் கனகராஜ் எனக்கு கொடுத்ததற்கு ரொம்ப நன்றி நானும் LCU   வில் இருக்கிறேன்.

என்னால ஒரு ரசிகர் கூட பாதிக்க கூடாது.? சென்னையில் ஷூட்டிங்கை நிறுத்தி வைக்கும் அஜித்.!

அது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. மீண்டும் அர்ஜுன் உடன் இணைந்து ஒரு படம் நடித்து வருகிறேன் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என கூறியுள்ளார் இவர் சொல்வதைப் பார்த்தால் அது விடாமுயற்சி படமாக இருக்கும் என பலரும் கூறி வருகின்றனர்.

Exit mobile version