கண்ணைக் கட்டிக்கொண்டு தலைகீழாக நின்று நடிகை திரிஷாவை வரையும் தீவிர ரசிகர். வைரலாகும் வீடியோ.

0

actress trisha fan draw her picture video viral:நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் 15 வருடத்திற்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அஜித், விஜய், ஜெயம் ரவி, கமல், ரஜினி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை திரிஷா மௌனம் பேசியதே, சாமி, சந்தோஷ் சுப்ரமணியம், கில்லி, விண்ணைத்தாண்டி வருவாயா,  96 போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இவர் விஜய், சிம்பு, ராணா போன்றோரை காதலித்ததாக பேசப்பட்டது.

நடிகர் ராணாவே பேட்டி ஒன்றில் நான் சென்னை வந்தால் திரிஷா வீட்டில்தான் தங்குவேன் என கூறி இருந்தார். இவர்கள் இருவரும் முதலில் நட்பாக பழகி இருக்கிறார்கள். பின்பு அதுவே காதலாக மாறி இருவரும் காதலித்தனர், ஆனால் ஒத்துப்போவதால் இருவரும் பிரிந்தனர்.

இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் நடிகர் ராணா விற்கு திருமணம் நடந்துமுடிந்தது. அதனால் தற்போது கூட நடிகை திரிஷா தோழிகளை அந்த விஷயத்துக்கு மட்டும் வைத்துக் கொள்வார்கள் என வெளிப்படையாக கூறியிருந்தார்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் வீட்டிலேயே இருந்த நடிகை திரிஷா தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் இவர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அந்த பதிவில் 96 படத்தின் பாடலை போட்டுக்கொண்டு அவரின் தீவிர ரசிகர் ஒருவர் கண்ணை கட்டிக்கொண்டு தலைகீழாக த்ரிஷாவை வரைந்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த வீடியோ.