பட்டுபுடவை அணிந்து மணப்பெண்ணாக நடிகை த்ரிஷா!! மாப்பிளை யார் என கேட்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் தமிழில் அப்படி பிரபலமடைந்துள்ளாரோ அதே அளவிற்கு தெலுங்கிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தனது சிறந்த நடிப்பின் காரணமாக சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நாயகிகளில் ஒருவராக வலம் வருகிறார்.தற்போது த்ரிஷா ராங்கி,கர்ஜனை,பரமபதம் ஆட்டம் போன்ற படங்களின் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவரைப் பற்றிய பல சர்ச்சைகள் இணையதளத்தில் வந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் இவர் திருமணம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது. அதற்கு பதில் அளித்த த்ரிஷா ஏற்கனவே இரண்டு,மூன்று முறை காதல் முறிவு ஏற்பட்டதால் தான் திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் த்ரிஷா மற்ற நடிகைகளைப் போலவே சோசியல் மீடியாக்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

tirsha 1
tirsha 1

அந்தவகையில் திருமணக்கோலத்தில் இருக்கும் அழகிய புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

tirsha
tirsha

Leave a Comment