நான் நடித்த கதாபாத்திரத்தில் எனக்கு இந்த கதாபாத்திரம் தான் மிகவும் பிடிக்கும் என ரசிகர்களின் கேள்விக்கு ஓப்பனாக பதில் கூறிய நடிகை தமன்னா.!

thammannaah
thammannaah

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தமன்னா.  சிறந்த நடிப்பினால் ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நாயகிகளில் ஒருவராக மாறினார். இவர் வியாபாரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

தனது முதல் படத்திலிருந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்ததால் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய இவர் என்னடி நடிகர் களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் சுறா, படிக்காதவன், வீரம், அயன் போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் கலக்கி வந்தார்.

இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான விஷாலின் ” ஆக்சன் ” திரைப்படம் கலவை விமர்சனத்தை பெற்று தந்தது. அதன் பிறகு தமிழில் பெரிதாக ஆராதனை காட்டாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தொடர்ந்து நடித்து வந்தார்.

மும்பை டிராபிக்கில் படப்பிடிப்பிற்காக சென்று கொண்டிருக்கும் பொழுது ரசிகர்களின் பல கேள்விகளுக்கு தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்தார்.  அதில் பிடித்த உணவு தோசை, என்றும் விரைவில் தமிழின் நடிப்பேன் என்றும் ரசிகர்கள் ஏகப்பட்ட கேள்விகளுக்கு க்யூட்டாக பதில் அளித்துள்ளார்.

மேலும் ரசிகர் ஒருவர் ‘கேன்ஸ்’ அனுபவம் பற்றி கேட்டுள்ளார். அதற்கு உலக அரங்கில் இந்திய சினிமாவுக்கு கிடைத்த பெருமையாகவே “கேம்ஸ்”திரைப்பட விழாவை பார்க்கிறேன் என்றும் அதில் நானும் ஒரு சிறு அங்கமாக இருந்து கலந்து கொண்டது பெரும் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது என்று பதில் அளித்துள்ளார்.

மற்றும் ரசிகர் நீங்க நடித்த படங்களிலேயே உங்களுக்கு பிடித்த ரோல்னா எதை சொல்லுவீங்க என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி உடன் நடித்த “தர்மதுரை” சுபாஷினி கதாபாத்திரம் ரொம்பவே பிடிக்கும் என்கின்றார். அடுத்ததாக ராஜமவுலி பிரபாஸிற்கு ஜோடியாக நடித்த பாகுபலி படத்தில் நான் இளவரசி அவந்திகா கதாபாத்திரமும் மனதை கவர்ந்த கதாபாத்திரம் என்றும் தமன்னா கூறியுள்ளார்.  இவர் ரசிகர்களின் கேள்விக்கு தொடர்ந்து ஓபன் ஆக பதில் கூறியது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.