விஜய்சேதுபதியை கட்டி அணைத்தபடி பைக்கில் நடிகை தமன்னா..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

0

தமிழ் சினிமாவில் தற்போது டஜன் கணக்கில் திரைப்படம் நடித்து வரும் ஒரு நடிகர் என்றால் அது விஜய் சேதுபதிதான் இவர் தற்போது சன் டிவியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃ ப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் சமீபத்தில் தான் மாஸ்டர் எனும் திரைப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நடித்திருந்தார் இத் திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் தொடர்ச்சியாக பெற்று வந்து கொண்டிருக்கிறார்

இவ்வாறு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது போலவே தெலுங்கில் நடிகை தமன்னா தொகுத்து வழங்கி வருகிறார் இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் புரமோஷனுக்காக ஒரு வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார்கள்.

இவ்வாறு வெளிவந்த அந்த வீடியோவில் நடிகர் விஜய்சேதுபதி தெலுங்கில் பேசியதுமட்டுமல்லாமல் நடிகை தமன்னாவை பைக்கில் அழைத்து வந்திருப்பார். அப்பொழுது  தமன்னாவை இறக்கிவிட்டு ஒரு வசனம் பேசுவார் அது நானும் ரவுடிதான் படத்தில் பேசியது போலவே இருக்கிறது.

பொதுவாக விஜய் சேதுபதி சாதாரணமாக பேசினாலே போதும் ரசிகர்களின் கைதட்டும் கூச்சலும் அதிகமாக இருக்கும் இந்நிலையில் அவர் தெலுங்கில் சரளமாக வசனம் பேசியது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.

மேலும் தற்போது இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியானது தமிழில் தமிழிலும் தெலுங்கிலும் இந்தியிலும் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சியானது இன்னவேட்டிவ் பிலிம் அகடமி உடன் இணைந்து எண்டிமொள் சைன் என்ற இந்திய நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.