சிக்ஸ் பேக்கில் ஹீரோகளுக்கு டஃப் கொடுக்கும் நடிகை டாப்ஸி.! புகைப்படத்தால் மிரண்டுப் போன ரசிகர்கள்..

தெலுங்கு திரைப்படங்களின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து இதன் மூலம் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகை டாப்ஸி. இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார் இதனை தொடர்ந்து காஞ்சனா, வந்தான் வென்றான் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவ்வாறு தமிழ் திரைப்படங்களில் நடித்தாலும் டாப்ஸிக்கு பெரும்பாலும் பாலிவுட்டில் தான் அதிக பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இவ்வாறு தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து வரும் இவர் தற்பொழுது வோ லட்கி ஹை கஹான், டங்கி, ஃபிர் ஆயி ஹசீன் தில்ரூபா உள்ளிட்ட மூன்று ஹிந்தி திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

மேலும் இதனை அடுத்து ஜன கன மன என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பொதுவாக நடிகைகளை பொருத்தவரை தங்களுடைய அழகை பராமரித்து வருவது வழக்கம் அந்த வகையில் டயட் மற்றும் பிட்னஸ் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள் மேலும் பலரும் தங்களுடைய உடற்பயிற்சி வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் ஒரு சில நடிகைகள் மட்டுமே உடற்பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்பொழுது ஹீரோக்களுக்கு நிகராக நடிகை டாப்ஸி சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ளார். அந்த வகையில் சமீப பேட்டி ஒன்றில் கலந்துக் கொண்ட இவர் சினிமாவைச் சார்ந்தவர்கள் தொழில் நிமித்தமாக பல இடங்களுக்கு செல்லும் பொழுது அங்கே கிடைக்கும் உணவுகளை உண்ண வேண்டியது உள்ளது. எனவே அதன் தாக்கம் ஐந்து, ஆறு வருடங்களிலேயே உடம்பில் காட்டுகிறது நான் என்னுடைய பிட்னஸ்சில் அதிக கவனம் செலுத்துகிறேன் எனவே என்னுடைய டய்ட்டிசனுக்கு மட்டும் மாதம் ஒரு லட்சம் சம்பளம் கொடுக்கிறேன் எனக் கூறியிருந்தார்.

topsee 1
topsee 1

அந்த வகையில் சமீபத்தில் இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்த நிலையில் தற்போது ஜிம் பயிற்சியாளர் உடன் எடுத்துக்கொண்ட சிக்ஸ் பேக்ஸ் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட அது வைரலாகி வருகிறது. அதில் அந்த புகைப்படத்திற்கு கீழே ஜிம் பயிற்சியாளருக்கு நன்றி கூறி இனி நான் எனக்கு பிடித்த பூரியையும் ரொட்டியையும் சாப்பிடுவேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment