பிரபல நடிகையை ஓட ஓட விரட்டும் சினிமா வட்டாரம்..! தனது வாழ்வில் நடந்த கசப்பான சம்பவத்தை கண்ணீருடன் கொட்டிய டாப்சி..!

0

actress tapsee cinema life incident: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஆடுகளம் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை டாப்ஸி.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருந்தாலே பல இன்னல்களையும் சர்ச்சைகளிலும் சிக்கி தான் ஆக வேண்டும்.

அந்த வகையில் நடிகை டாப்ஸி தனது வாழ்வில் நடந்த மிக சோகமான நிகழ்வுகளை சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது ஒரு திரைப்படத்தில் நடிக்கும் பொழுது அந்த நடிகரின் மனைவிக்கு டாப்ஸியை பிடிக்காத காரணத்தினால் அந்த படத்தில் இருந்து அவரை நடிக்க விடாமல் செய்து விட்டார்களாம்.

மேலும் மற்றொரு திரைப்படத்தில் நடிகை டாப்ஸி பேசிய வசனம் ஆனது ஹீரோவிற்கு பிடிக்காத ஒரே காரணத்தினால் அந்த வசனத்தை டப்பிங் ஆர்டிஸ்ட் வைத்து அவருக்கே தெரியாமல் மாற்றம் செய்து விட்டார்களாம்.

இதைத்தொடர்ந்து மற்றொரு திரைப்படத்தில் ஹீரோவுடைய என்ட்ரியை விட தனது என்று மிகவும் அம்சமாக இருந்த காரணத்தினால் அதையும் மாற்றி அமைத்து விட்டார்கள். அது மட்டுமில்லாமல் ஒரு திரைப்படத்தில் நான் சூப்பர் ஹிட் கொடுக்காத காரணத்தினால் என்னுடைய சம்பளத்தையும் குறைத்துவிட்டார்கள்.

tapsee pannu
tapsee pannu

மேலும் சமீபத்தில் பெண்கள் முயற்சித்து நடிக்கும் எந்த ஒரு திரைப்படங்களிலும் சூப்பர் ஹிட் ஹீரோக்கள் நடிக்க தயங்குகிறார்கள். இதற்கு முக்கிய காரணமே நாங்கள் அவர்களுக்கு நிகராக மாறி விடுவோம் என்ற பயம் தான் என நடிகை டாப்சி சமூக வலைதள பக்கத்தில் தன் வாழ்வில் நடந்த கசப்பான செய்திகளை பகிர்ந்துள்ளார்.