கொரோனா!! சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய நடிகை தமன்னா!! கட்டித்தழுவும் பெற்றோர்கள்!! வைரலாகும் வீடியோ.

0

actress tamannah return to her home after corona treatment her parents gives her walm welcome video:தமன்னாவின் அப்பா, அம்மாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அதனைத் தொடர்ந்து இவரும் டெஸ்ட் செய்து பார்த்தார். அப்போது அவருக்கு ரிசல்ட் நெகட்டிவ் என வர வெப் சீரிஸ் சூட்டிங்காக ஹைதராபாத்திற்கு சென்றார்.

ஆனால் அங்கு போய் அவருக்கு காய்ச்சல் ஏற்பட உடனே கொரோனா டெஸ்ட் எடுத்துப் பார்த்ததில் பாசிட்டிவ் என வந்துவிட்டது. எனவே அதனால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். மேலும் அவர் கூறியதாவது தான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும் தானும் தனது படக்குழுவும் பாதுகாப்பாக இருந்தும் கொரோனா பாதித்துவிட்டது.

நான் மருத்துவர்களின் பராமரிப்பில் இருந்தேன் குணமானதை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளேன் இப்போது நன்றாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும்  14 நாள் தனிமைப்படுத்தப்பட்டு பிறகு மீண்டும் வீட்டுக்கு திரும்பி உள்ளேன் நான் நலம் பெற பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.

தமன்னா மேலும் கொரோனாவிலிருந்து மீண்டு மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் காரில் இருந்து இறங்கி சென்றதும் அவரின் பெற்றோர்கள் அவரை கட்டியணைத்து வரவேற்கின்றனர். அதோடு மட்டுமல்லாமல் அவர் வளர்த்த செல்ல நாய்க்குட்டி அவரைப் பார்த்தவுடன் ஓடி வருகிறது.

அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.