தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா இவர் தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்திருந்தாலும் அதில் இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது அதே சமயம் அந்த படங்கள் வெற்றி பெற்றன.
ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ் போன்ற டாப் ஹீரோகளின் படங்கள் மட்டுமே நடித்தவர். இதனால் பெரிய அளவில் பிரபலம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் இவருக்கு என ரசிகர்களும் உருவாகினர். ரசிகர்களை தக்க வைத்துக் கொள்ள அவ்வப்போது கிளாமரான புகைப்படம் என்றும் வீடியோக்களை..
வெளியிட்டு தக்கவைத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் சினிமா உலகில் தன்னை நம்பி வந்த எந்த ஒரு வாய்ப்பையும் கைப்பற்றி வந்த அனைத்து கதாபாத்திரங்களும் சூப்பராக நடித்து அசத்தினர். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை தமன்னா பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.
எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் மிகப் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகிய திரைப்படம் பாகுபலி இதன் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமும் வெளிவந்து அந்த படமும் விமர்சன ரீதியாக வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது குறிப்பாக வசூலில் ஆயிரம் கோடிக்கு மேல் அள்ளி சாதனை படைத்தது. இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக தமன்னா நடித்திருப்பார். பாகுபலி படத்தில் தமன்னாவை நடிக்க வைக்க படக்குழு திட்டமிடவே இல்லையாம்..
முதலில் ஒரு குரங்கினை தான் தேர்வு செய்தோம் ஆனால் அது மிருகவதை தடுப்புச் சட்டத்தில் எதுவும் பிரச்சனை வரும் என நினைத்தோம் தொடர்ந்து கிராபிக்ஸ் பண்ணலாமா என நினைத்த போது அது படத்தின் அழகினை கெடுக்கும் அதைத் தொடர்ந்து அந்த கதாபாத்திரத்தில் தமன்னாவை ஒப்பந்தம் செய்தோம் கமர்சியலுக்காக காதல் காட்சிகளை தேர்வு செய்தோம் என ராஜமௌலி தெரிவித்தார்.