‘ஜெயிலர்’ ஆடியோ லாஞ்ச் விழாவில் செம ஹாட்டாக கலந்துக் கொண்ட தமன்னா.! 10 லட்சத்தை கடந்து சாதனை..

Actress Tamannaah: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் நடிகை தமன்னாவின் ஹாட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தமன்னாவின் புகைப்படம் வெளியான சில மணி நேரங்களில் 10 லட்சம் லைக்குகளை பெற்று சாதனை படைத்திருக்கும் நிலையில் அது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்திருக்கும் நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று ரிலீஸ்சாக தயாராக இருக்கிறது.

எனவே இதற்காக படக்குழுவினர்கள் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட தொடங்கி இருக்கின்றனர். முதற்கட்டமாக சமீபத்தில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. இந்த படத்தில் ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் தமன்னா நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் நடித்துள்ளார்.

tamannaah

மேலும் ஜெயிலர் படத்தின் மூலம் முதன்முறையாக ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார் தமன்னா. அந்த வகையில் ரஜினிவுடன் இணைந்து காவாலா பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டிருந்தார். ஜெயிலர் படத்தின் மூன்று பாடல்களும் வெளியாகி பட்டித் தொட்டி எங்கும் வைரலானது. இவ்வாறு அதேபோல் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் காவாலா பாடலுக்கு தமன்னா நடனம் ஆடியிருந்தார்.

tamannaah

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிவப்பு நிற உடையில் பீகாக் போன்ற சேலை அணிந்து செம ஹாட்டாக கலந்துக் கொண்டார். அப்பொழுது எடுத்துக்கொண்ட தன்னுடைய ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட படும் வைரலாகி வருகிறது

tamannaah

அந்த வகையில் தமன்னாவின் புகைப்படம் பதிவிட்ட ஒரு நாளிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. தற்பொழுது மில்லியன் கணக்கான லைக்குகளை பெற்று சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

tamannaah 2

Leave a Comment

Exit mobile version