பிரபல முன்னணி நடிகருக்கு ஜோடியாக மலையாளத் திரைவுலகிற்கு அறிமுகமாகவும் நடிகை தமன்னா.!

தன்னுடைய அழகினால் ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டவர் தான் நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தொடர்ந்து அடுத்த அடுத்த திரைப்படங்கள் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார் அந்த வகைகள் தற்பொழுது மலையாளத்தில் பிரபல முன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன்முதலில் நடிக்க இருக்கிறார்.

இது குறித்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மலையாளத்தில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் திலீப் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிக் கொண்டு கைது செய்யப்பட்டவர் பிறகு மூன்று மாத சிறை தண்டனை அனுபவித்தார். இதன் காரணமாக மக்கள் மத்தியில் தனக்கென இருந்த இமேஜை கெடுத்துக் கொண்டார்.

இப்படிப்பட்ட நிலையில் சிறைத்தண்டனையை அனுபவித்து கொண்டிருக்கும் பொழுதே அவர் நடித்திருந்த ராம்லீலா என்ற திரைப்படம் வெளியானது. இவ்வாறு இந்த திரைப்படம் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய வெற்றினை பெற்றது அதாவது திலீப்பின் நடிப்பில் முதன் முதலில் 100 கோடி வசூல் பெற்ற திரைப்படம் இந்த திரைப்படம் தான் இது மிகப்பெரிய பெருமையை பெற்று தந்தது.

அந்தத் திரைப்படத்தினை அருள்கோபி என்பவர் இருக்கிறார் மேலும் அதன் பிறகு மோகன்லாலின் மகன் பிரணவை வைத்து அருண் கோபி இயக்கிய 21ஆம் நூற்றாண்டு படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக வெற்றியை பெறவில்லை. இப்படிப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அருண் கோபி தன்னுடைய இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை நடிகர் திலீப்க்கு கொடுத்துள்ளார்.

movie 1
movie 1

இந்த படம் நடிகர் திலீபன் 147வது படமாக உருவாக இந்தப் படத்தின் மூலம் முதன்முறையாக மலையாள கதாநாயகியாக தமன்னா நடிக்க இருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் நேற்று இந்த படத்தின் துவக்க விழா நடைபெற்ற நிலையில் அதில் தமன்னா, திலிப் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.மேலும் இந்த திரைப்படம் தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு தெலுங்கிலும் நடித்துள்ள இவர் முதன்முறையாக மலையாளத்தில் படத்தில் நடிகை தமன்னா நடிக்க இருக்கிறார்.

Leave a Comment