காதலிப்பதாக வதந்திகள் பரவிய நிலையில் நடிகை தமன்னா விளக்கம்.! ஒவ்வொருவருக்கும் சொந்த வாழ்க்கை இருக்கிறது என வருத்தம்..

tamanna
tamanna

தமிழ் சினிமாவில் தன்னுடைய இளமை காலகட்டத்தில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தற்பொழுது ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருபவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி என பல மொழிகளிலும் நடித்து சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருகிறார்.

கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் இதனை தொடர்ந்து தனுசுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன், விஜயுடன் சுறா, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். இப்படிப்பட்ட நிலையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் நடிப்பில் அடுத்த அடுத்த திரைப்படங்கள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் தொடர்ந்து ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த இவர் தற்பொழுது எல்லாம் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவருடைய நடிப்பில் பப்ளி பவுன்சர் என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இதனைத் தொடர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தொடர்ந்து தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் இவர் குறித்த பல வதந்திகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவை பொருத்தவரை நடிகைகளை பற்றி பல வதந்திகள் வெளியாகுவது வழக்கம். அதுவும் இத்தனை வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் தமன்னா பற்றிய அடிக்கடி காதல் கிசுகிசுக்கள் வெளியாகி வருகிறது.

எனவே இது குறித்து நடிகை தமன்னா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் எனக்கு எதிராக நிறைய வதந்திகள் பரவுகின்றனர். அதையெல்லாம் யார் கிளப்பி விடுகிறார்கள் என தெரியவில்லை. அதை படிக்கும் பொழுது சிரிப்பு தான் வருகிறது ஒவ்வொருவரும் சொந்த வாழ்க்கை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என அவர் கூறியுள்ளார்.