Actress Tamannaah: நடிகை தமன்னா அஜித் குறித்து பேசிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கேடி திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான தமன்னாவிற்கு இந்த படம் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை. இதனை அடுத்து பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான கல்லூரி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட பிறகு தமிழில் அவருக்கு ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்தது. இதனை தக்க வைத்துக்கொண்டு தொடர்ந்து தனது பெஸ்ட்டை கொடுத்து வந்தார். அப்படி விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கோலிவுட்டில் தனக்கான ஒரு அங்கீகாரத்தை பிடித்தார்.
தற்பொழுது தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்குல ஏராளமான பட வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார். இந்நிலையில் சமீப காலங்களாக இவருக்கு தமிழிலும் தெலுங்கிலும் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதனால் ஹிந்தியில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி சமீபத்தில் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 அந்தலாஜி வெப் சீரியலில் படுக்கையறை காட்சிகளில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.
சமீப காலங்களாக விஜய் வர்மாவை காதலிக்க ஆரம்பித்துள்ளார். தற்பொழுது தமன்னா தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அப்படி இந்த படத்தில் இடம் பெற்றிருந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான காவாலா பாடலில் இவருடைய நடனம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமடைந்துள்ளது. இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று ரிலீஸ்சாக இருக்கிறது.
இதற்கிடையில் சமீப பேட்டியில் பங்கு பெற்ற தமன்னா வீரம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருப்பீர்கள் ஆனால் அஜித் அந்த படத்தில் கொஞ்சம் டைப் அடித்திருக்கலாம் என எங்களுக்கு தோன்றியிருந்தது உங்களுக்கு எப்படி தோன்றியது? இது குறித்து இயக்குனரிடம் சொல்ல வேண்டும் என நினைத்தீர்களா? அஜித் அதில் டை அடித்திருந்தால் இன்னும் உங்கள் இருவருக்கும் மேட்ச் ஆயிருக்குமோ என்றும் தோன்றியது எனவே இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு தமன்னா, அப்போது என்னால் கேட்க முடியவில்லை இப்பொழுது என்றால் கேட்டிருப்பேன் ஆரம்பத்தில் அப்படியான சுதந்திரம் எதுவும் எனக்கு இல்லை ஆனாலும் ஒவ்வொரு நடிகரும் கேள்வி கேட்க வேண்டும். மற்ற துறைகளில் அந்த சுதந்திரம் இருக்கிறது. வெளிப்படையாக பேச சில இயக்குனர்கள் ஸ்பேஸ் கொடுப்பார்கள் சிலர் கொடுப்பதில்லை என்று கூறியுள்ளார். இதற்கிடையில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் தமன்னாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.