மூத்த நடிகர்களுடன் நடிப்பது குறித்து விளக்கம் அளித்த நடிகை தமன்னா.! இதை மட்டும் பாருங்க..

Actress Tamannaah: நடிகை தமன்னா மூத்த நடிகர்களுடன் நடிப்பது குறித்து அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னாவிற்கு சமீப காலங்களாக பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனவே இதன் காரணத்தினால் தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

அப்படி சமீபத்தில் இவருடைய நடிப்பில் ஜீ கர்தா வெப் சீரிஸ், லஸ்ட் ஸ்டோரீஸ் 2 அந்தலாஜியிலும் நடித்து மிரட்டி இருந்தார். இந்த வெப் சீரிஸில் தமன்னா கவர்ச்சி, படுக்கையறை காட்சிகள் போன்றவற்றில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து வருகிறார்.

இதில் இடம்பெற்றிருந்த காவாலா பாடலுக்கு இவருடைய நடனம் பட்டிப்தொட்டி எங்கும் வைரலானது. இதற்கிடையில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு தமிழனை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து தமன்னா மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீப பேட்டி ஒன்றில் தமன்னா தொடர்ந்து மூத்த நடிகர்களுடன் மட்டுமே நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். எனவே இது குறித்து கேள்வி எழுப்பும் அதற்கு விளக்கம் அளித்த தமன்னா வயது வித்தியாசத்தை பார்க்க கூடாது திரையில் வரும் இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே பாருங்கள் 60வது வயதிலும் டாம் க்ரூஸ் அட்டகாசமாக ஆக்சன் செய்வாரே அந்த வயதில் நான் குத்தாட்டம் போட விரும்புவேன் என்றார்.

ஜெயிலர் படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் இதனை அடுத்து போலோ ஷங்கர் படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. இவ்வாறு தமன்னா நடித்திருக்கும் இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment