திரை உலகில் வெற்றியடைந்த நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை அவ்வப்போது ரசிகர்கள் வெளியிடுவது வழக்கம். அதனால் அந்த நடிகர், நடிகைகள் பேசும் மக்கள் மத்தியில் பொருளாகவே காணப்படுகின்றனர்.
அந்த வகையில் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை சிறப்பாக வைத்திருப்பவர் தான் நடிகை தமன்னா. தென்னிந்திய திரை உலகில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் தமன்னா தற்போது தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ளதோடு மட்டுமல்லாமல் சினிமாவையும் தாண்டி தற்போது வெப்சீரிஸ் மற்றும் தொலைக்காட்சிகளிலும் தலைகாட்ட அதிகம் விரும்பி உள்ளார்.
அந்தவகையில் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தெலுங்கில் தொகுத்து வழங்க ரெடியாக இருக்கிறார் தமன்னா. கொரோனா காலகட்டத்தில் சினிமாவை மட்டும் நம்பி இருக்காமல் மீடியா உலகில் எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் சுற்றித் திரிகிறார் இதன் மூலமாகவும் நல்ல காசு பார்த்து வருகிறார்.
ஒரு பக்கம் தனது மார்க்கெட் சரிந்து விடக்கூடாது என்பதற்காக ரசிகர்களை தன் வசப்படுத்திக் கொள்ள இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை அள்ளி வீசுகிறார் தமன்னா. இவர் சமீப காலமாக வெளியிடும் புகை படங்கள் ஒவ்வொன்றும் வேற லெவல் லைக்குகளை அள்ளுகின்றன அதுபோல தற்போது யாரும் எதிர்பார்க்காத ஒரு புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.
பள்ளி பருவத்தில் நடிகை தமன்னா தனது தோழி, தோழர்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
