தமன்னா அழகோ அழகு “ஸ்போர்ட்ஸ் ட்ரெஸ்ஸில்” எப்படி இருக்கிறார் பாருங்கள் – வைரலாகும் புகைப்படம்

tamanna
tamanna

தென்னிந்திய சினிமா உலகில் இன்று முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா. முதலில் 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற படத்தில் நடித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அதன் பிறகு படிக்காதவன், சிறுத்தை, பையா, சுறா, தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் என அடுத்தடுத்த ஹிட்..

படங்களை கொடுத்து ஓடிய நடிகை தமன்னா. இப்போ தமிழையும் தாண்டி கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் பட வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் இதனால் நாளுக்கு நாள் அவருடைய மார்கெட் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவ்வப்பொழுது வெப் சீரிஸ்களிலும் நடித்து அசத்துகிறார் என்பது குறிப்பிடதக்கது.

அதில் நடிகை  தமன்னாவின் கிளாமர் கொஞ்சம் தூக்கி தான் இருக்கிறது இதுதான் இப்படி என்றால் தனது இன்ஸ்டா பக்கத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்  அதுக்கும் மேல தாறுமாறாக தான் இருக்கின்றன இதனால் இவர் காண ரசிகர்கள் பட்டாளம் குறையவே இல்லை..

இப்படி சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் நடிகை தமன்னா சிறு இடைவெளிக்கு பிறகு தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் “ஜெயிலர்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த படம் ஹிட் அடிக்கும் பட்சத்தில் தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை தமன்னா ஸ்போர்ட்ஸ் டிரெஸ்ஸில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் உங்க பிட்னஸ்  ரகசியம் என்ன என கேட்டு அந்த புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி வீசி கமெண்டுகளை அடித்து வருகின்றனர் இதோ நடிகை தமன்னாவின் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.