சசிகுமாருடன் ஜோடி போட்டு நடித்த நடிகை சுவாதி மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார்.? எந்த படம் தெரியுமா.? விவரம் இதோ.

0

திரை உலகில் கிராமத்து சாயலில் உள்ள கதைகளில் நடித்த நடிகைகளுக்கு எப்பொழுதும் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் அதை சரியாக புரிந்து கொண்டு நடித்து தனக்கான வெற்றியை பதிவு செய்தவர் தான் நடிகை சுவாதி ஆரம்பத்திலிருந்து  தற்போது வரையும் பெரிதும் கிராமத்து சாயலில் படங்களில் நடித்ததால் இவருக்கான ரசிகர் பட்டாளம் வேற லெவலில் உருப்பெற்றது.

நடிகை சுவாதி வேறு மொழிகளில் நடித்து இருந்தாலும் தமிழில் சசிகுமார் இயக்கத்தில் நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் தான் இவருக்கு பேரையும் புகழையும் வேற லெவலில் பெற்று தந்தது.

முதல் படத்திலேயே இவரின் நடிப்பு செம்மையாக இருந்ததால் தொடர்ந்து சசிகுமாரின் அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க தொடங்கினார் அந்த வகையில் போராளி படத்திலும் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி வெற்றிக்கு துனையாக நின்றார்.

அதன் பிறகு இவர் கனிமொழி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா வடகறி போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தினார். இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த சுவாதி  திடீரென கேரளாவைச் சேர்ந்த விகாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்

சிறப்பாக வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவரை காதலித்து திருமணம் செய்து கொண்டது அவரது ரசிகர்களுக்கு இன்பத்தை கொடுத்தாலும் ஒரு கட்டத்தில் வருத்தத்தை கொடுத்தது ஏனென்றால் அதன் பிறகு இவர் பெரிதும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை இப்படி இருந்த ரசிகர்களுக்கு மீண்டும் தீனி போட தற்போது சுவாதி ரெடி ஆகி உள்ளார்.

அந்தவகையில் தெலுங்கு படம் ஒன்றில் சுவாதி நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதால் அவரை காண ஒரு கூட்டம் ரெடியாகி உள்ளது மேலும் பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே அவருக்கு தற்போது இருக்கிறது.