பொதுவாக சினிமாவில் உள்ள ஏராளமான நடிகைகள் திருமணத்திற்குப் பிறகு திரைப்படங்கள நடிப்பதற்கு பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்து வருபவர்கள் பலர் உள்ளார்கள். ஆனால் தற்போதெல்லாம் முன்னணி நடிகைகளாக ஜொலித்து வரும் நடிகைகள் திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து தனது கணவர் துணையுடன் சினிமாவில் நடித்து கலக்கி வருகிறார்கள்.அந்தவகையில் திருமணத்திற்குப் பிறகு நடிகை சுவாதி சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
சிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு சுவாதி ரெட்டி அறிமுகமானார். இத்திரைப்படத்தில் கிராமத்துப் பெண் போல் மிகவும் அடக்க ஒடுக்கமாக மௌனமான சிரிப்பு போன்றவற்றால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து யாக்கை,போராளி, வடகறி உள்ளிட்ட இன்னும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சினிமாவில் பிரபலமடைந்தார். அதோடு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.
அதோடு இவர் நடிகையையும் தாண்டி டப்பிங் ஆர்டிஸ்ட், பின்னணி பாடகி என பலவற்றிலும் பணியாற்றி பன்முகத் தன்மைகளை வெளிப்படுத்தி வந்தார். இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருந்த வந்த இவர் 2018ஆம் ஆண்டு இந்தோனேஷியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

அதாவது இவர்கள் இருவரும் விமானத்தில் முதன்முதலாக சந்தித்தார்கலாம் சுவாதியின் கணவர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாராம். இதன் மூலம் சந்தித்துக் கொண்டு பிறகு திருமணம் செய்து கொண்டார்கள் இந்நிலையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சுவாதி மீண்டும் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார்.
ஆனால், தமிழில் இல்லையாம் தெலுங்கில் நான் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம் இந்த திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் மீண்டும் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்டு வரலாம் என்று உறுதியாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது.