சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்த சொர்ணாவா இது.? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

Actress Suvarna Mathew; தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த் தனது திரை வாழ்க்கையின் ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்திருக்கும் நிலையில் அப்படி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த முக்கியமான படம் தான் சந்திரமுகி. இந்த படம் கடந்த 2005ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது.

இதனை அடுத்து தற்பொழுது இந்த படத்தின் 2வது பாகம் உருவாகி வருகிறது அப்படி சந்திரமுகி 2 திரைப்படத்தில் ரஜினி கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிக்க, ஜோதிகா கேரக்டரில் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தில் பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர், மாளவிகா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

அப்படி இந்த படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து பிரபலமானவர் தான் சொர்ணா. தாய் மனசு என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான சொர்ணா இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அப்படி மாயாபஜார், கோகுலத்தில் சீதை, பெரிய தம்பி போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலமான இவர் தெலுங்கில் நடித்து பிசியாக இருந்து வந்தார்.

Suvarna Mathew
Suvarna Mathew

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சினிமாவை விட்டு மொத்தமாக விலகிய சொரணம் திருமணம் செய்து கொண்டு கணவர், குழந்தைகளுடன் செட்டில் ஆகியுள்ளார். அந்த வகையில் சொரணா கடந்த 2003ஆம் ஆண்டு Varghese Jacob என்பதை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலான நிலையில் தற்போது இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.

Suvarna Mathew
Suvarna Mathew

இந்நிலையில் தற்பொழுது சொர்ணா ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருக்கும் நிலையில் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக இதனை பார்த்த ரசிகர்கள் சந்திரமுகி சொர்ணாவா இது என ஆச்சரியப்பட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.