என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு நடனமாடிய நடிகை சுருதி ராஜ்..!! வீடியோவை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்..

0

தற்போது வெள்ளித்திரை நடிகைகளின் அளவிற்கு சின்னத்திரையில் பிரபலமடைந்துள்ளவர் நடிகை ஸ்ருதி ராஜ்.இவர் தமிழ், மலையாளம்,தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் திரைப்படங்கள் மற்றும் தொடர்களிலும் நடித்து திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் மாண்புமிகு மாணவன், இனி எல்லாம் சுகமே, காதல் காமம்,ஜெர்ரி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதன் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு கிடைக்காத காரணத்தினால் சீரியலில் நடிப்பதில் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.  அந்த வகையில் தென்றல்,ஆபீஸ், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் உட்பட இன்னும் பல சீரியல்களில் நடித்து ஒட்டுமொத்த திரையுலகினர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

பெரும்பாலான நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் அழகு குறைந்துவிடுமோ என்ற எண்ணத்தில் பலர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் ஸ்ருதி ராஜியும் 40 வயதிற்கு மேல் ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

இது ஒருபுறமிருக்க இவரும் மற்ற நடிகைகளைப் போலவே தொடர்ந்து  தனது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள் என்று பலவற்றை சோசியல் மீடியாவில் வெளியிட மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது மிகவும் ட்ரெண்டிங்கான பாடலாக திகழ்வது என்ஜாய் என்ஜாமி இந்தப் பாடலுக்கு பல பிரபலங்கள் நடமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது சுருதி ராஜியும் மிகவும் அழகாக என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.