திருமணம் ஆயிடுச்சா உள்ளிட்ட பல எடக்கு முடக்கான கேள்விகளுக்கு பதிலளித்த ஸ்ருதிஹாசன்.! வைரலாகும் வீடியோ

0

வாரிசு நடிகையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் கமலின் மகளாக சினிமாவிற்கு அறிமுகமானார்.  தமிழில் தனுஷுடன் இவர் இணைந்து நடித்திருந்தார் 3 திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இவர் கடைசியாக தெலுங்கில் கிராக் திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்திரைப்படம் சமீபத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இத்திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கிலேயே பவன் கல்யாண், அஞ்சலி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நடித்திருந்த  வக்கீல் ஷாப் திரைப்படத்தில் சுருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்து இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இத்திரைப்படம் ரிலிஸ்க்காக காத்து வருகிறது விரைவில் OTT வழியாக வெளியாகும் என்று கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த யாழ யாழ பாடல் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்நிலையில் தற்போது லாக் டவுன் என்பதால்  வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் ஸ்ருதிஹாசன்  தனது காதலரான சாந்தனு ஹன்சிகாவுடன் பொழுதை கழித்து வருகிறார். அந்த வகையில் தனது காதலருடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு திருமணம் ஆகி விட்டது என சோசியல் மீடியாவில் தகவல் வைரலானது. இதன் காரணமாக ரசிகர்கள் தொடர்ந்து இதனைப்பற்றி தான் ஸ்ருதிகாசனிடம் கேட்டுவந்த உள்ளார்கள்.

அதற்கு பதிலளித்த சுருதி ஹாசன் எனக்கு திருமணம் ஆகவில்லை என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீங்கள் தமிழில் பேசுகிறீர்கள் ஆனால் உங்கள் அப்பாவிடம் இருக்கும் சாதாரண பேச்சு உங்களுக்கு வரவில்லையே என சிலர் கேட்டுள்ளார்கள். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்க கிளிக் செய்யவும்.