முன்னணி நடிகர் சூர்யாவை கொஞ்சம் கூட மதிக்காத அருண் விஜய்.! அதுக்குன்னு இப்படியா அசிங்கபடுத்துவார்.!

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை வாரிசு நடிகர்களின் வரத்து அதிகரித்து கொண்டே போகிறது,  அந்த வகையில் என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் அவர்களுக்கு திறமை இருந்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும் என்பதை சினிமா காட்டிவிட்டது.

அந்த வகையில் நடிகர் சூர்யா மற்றும் அருண்விஜய் வாரிசு நடிகர்களாக இருந்தாலும்,  அவர்களின் திறமையால் தான் சினிமாவில் நிலைத்து நிற்கிறார்கள்.  சூர்யாவிற்கு சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

அதேபோல் சூர்யாவிற்கு நீண்ட நாட்களாக ஹிட் கொடுக்க வேண்டும் என தடுமாறி வந்த நிலையில் இந்த திரைப்படம் அவருக்கு கைகொடுத்தது.  இந்த நிலையில் அருண் விஜய் நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பதற்காக தடுமாறி வந்தார்.

அதன்பிறகு அவருக்கு கை கொடுத்தது அஜித்தின் திரைப்படம். அஜித் திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார்.  அதன் பிறகு மீண்டும் ஹீரோவாக பல திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற்றார் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் அருண்விஜய் நடித்து வருகிறார்.

தெலுங்கில் அதிக ரசிகர்களை வைத்து இருப்பவர் நடிகர் சூர்யா தான் இந்த நிலையில் சூர்யா ஒரு முறை அருண் விஜய்யை செய்ய சொன்னதை கொஞ்சம் கூட மதிக்காமல் அப்படியே சென்று விட்டதாக ஒரு வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

சூர்யா மற்றும் அருண் விஜய் இருவரும் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் படித்தவர்கள்,  அப்பொழுது சூர்யா தன்னுடைய சக நண்பர்களுடன் சேர்ந்து சூர்யா ராக்கிங் செய்தாராம் ஆனால் கொஞ்சம் கூட மதிக்காமல் கடைசி வரை அதை செய்யாமல் ஏமாற்றி விட்டார் அருண் விஜய்.

இதனை சமிபத்தில் ஒரு மேடையில் நடிகர் சூர்யாவே அறிவித்தார் இந்த வீடியோ அருண் விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களிடையே இன்னும் அதிக நட்பை வெளிப்படுத்தி உள்ளது.

Leave a Comment