”பருவ மொட்டாக” இருக்கும் புகைபடத்தை வெளியிட்ட நடிகை சுனைனா.!

0

Sunnaina young age photo: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் சுனைனா. இவர் ஆரம்பத்தில் தெலுங்கு படமான சம்திங் ஸ்பெஷல் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். இதனைத்தொடர்ந்து அவர் பிற மொழி படங்களில் தனது திறமையை வெளிக்காட்டி பிஸியாக வலம் வந்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் அவர்கள் ரஜினி நடித்த சிவாஜி படத்தில் சுனைனாவை அறிமுகப்படுத்தினார். இதில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகர் படத்தில் நடித்தது அவருக்கு ஆறுதலைக் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து அவர் 2009ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.இதையடுத்து அவர் தொடர்ந்து சினிமாவில் பல படங்களில் நடித்தார். அதிலும் குறிப்பாக நீர்பரவை, சமர், திருத்தணி, யாதுமகி, வம்சம், மாசிலாமணி போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இத்தகைய படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லை இதனால் அவருக்கு பட வாய்ப்பு குறைந்தது.

இந்நிலையில் வரும் ஒருசில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் சில்லுக்கருப்பட்டி என்ற திரைப்படத்தின் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தொடர்ந்து தற்போது எரியும் கண்ணாடி போன்ற படங்களில் நடித்துவருகிறார். இவரது ரசிகர்கள் சுனைனா தமிழ் சினிமாவில் மீண்டும் வலம் வருவார் என எதிர்பார்த்து வருகின்றனர்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபொழுது தனது க்யூட்டான புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது அவர் 14 வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

 

sunnaina
sunnaina