தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த சுஜாதாவிற்கு இப்படி ஒரு பரிதாபமான மரணமா.

0
SUJATHA
SUJATHA

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுஜாதா 1952 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி இலங்கையில் கலேவில் பிறந்தவர். இளம் வயதிலேயே இவர் கேரளாவில் வந்து செட்டில் ஆனவர் அதனால் கேரளாவிலேயே தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.

தனக்கு சினிமாவில் அந்தளவு ஆர்வம் இல்லாமல் தான் இருந்தார் ஆனால் இவரை சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன, 1971ம் ஆண்டு தபஸ்வினி என்ற மலையாள படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார், இதனைதொடர்ந்து சுஜாதா எர்ணாகுளம் ஜங்ஷன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது இயக்குனர் கே பாலச்சந்தர் அவரை சந்தித்தார்.

சுஜாதாவின் நடிப்பு பாலச்சந்தரை வெகுவாக கவர்ந்து விட்டது அதனால் ‘அவள் ஒரு தொடர்கதை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்தடம் பதித்தார். அவருக்கு  தமிழில் அதுதான் முதல் படம் என்று யாராலும் கூறிவிட முடியாது ஏனென்றால் அந்த அளவிற்கு இவரின் நடிப்பு  திரைப்படத்தில் பிரமிக்க வைத்தது.

அதனைத் தொடர்ந்து பல திரைப்படத்தில் நடித்து வந்தார்,  முன்னணி கதாநாயகியாக தன்னை வளர்த்துக்கொண்டார், சிவாஜி கணேசன், முத்துராமன் ,சிவகுமார், ரஜினிகாந்த் ,கமல்ஹாசன, நாகேஸ்வரராவ் ,சோபன்பாபு, சிரஞ்சீவி மோகன் பாபு. இப்படி முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த இவர் ஒரு காலகட்டத்தில் ஜெயகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமண பந்தத்தின் மூலம் சுஜாதா ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்ட போல் ஆகி விட்டார் அதனால் அவரை சந்திப்பது மிகவும் கடினமாக இருந்தது, கதை சொல்லவோ கால்ஷீட் வாங்கவும் மிகவும் பெரிய சவாலாக அமைந்தது. 1990க்கு பிறகு அம்மா கதாபாத்திரத்தில் பெரிதாக நடித்து அசத்தினார் சுஜாதாவின் கடைசி திரைப்படம் அஜித் நடித்த வரலாறு திரைப்படம் பின்னர் உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்ட 2011 ஆம் ஆண்டு இறந்தார்.

அப்பொழுது தமிழகத்தை சட்டமன்ற பொதுத்தேர்தல் அதனால் பிரச்சாரம் ,தேர்தல் ஆட்சி மாற்றம் என அப்போதைய அரசியல் சூழ் நிலையால் சுஜாதாவின் மரணம் பலருக்கு அரியா கதையாகவே முடிந்துவிட்டது.