நடிகை சுஜா வருணி தன் குழந்தைக்கு கொடுக்கும் ஆரோக்கிய குளியல்!! எப்படி என்று பாருங்கள்!!

சுஜாவருணி தமிழ் திரைப்பட நடிகையாவார். இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் மிளகாய், பென்சில், கிடாரி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சில படங்களில் இரண்டாவது கதாநாயகியாகவும் நடித்துள்ளார். மேலும் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில்  நடித்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் சில படங்களில் பாடலுக்கு நடனம் ஆடுவது போன்று முடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ராம்குமார் கணேசன் என்பவரின் மகனான சிவாஜி தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இவருக்கு ஆகஸ்ட் 21 ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. சுஜா வருணி தனது குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களை புகைப்படங்களாக வலைத்தளத்தில் பதிவு இடுவார்.

அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையை குளிப்பாட்டும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தின் மூலம் அனைவருக்கும் ஒரு செய்தியை கூறியுள்ளார். மாலையில் குளிக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்களா என்று கேள்வி எழும்பும். அவர் மருத்துவரின் ஆலோசனைப்படி இரவு 8 மணிக்கு எண்ணெய் மசாஜ் மூலம் தன் குழந்தையை குளிப்பாட்டுவாராம். அப்போது தான் குழந்தை இரவில் அமைதியாக தூங்கும் மற்றும் குழந்தையின் உடல் வலியும் சரியாகுமாம்.

குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி நீங்களும் இதைச் செய்யலாம். கோடைகாலம் என்பதால் இந்த குளியல் உகந்ததே. நீங்களும் உங்கள் குழந்தைக்கு மருத்துவரின் ஆலோசனையின்படி ஒவ்வொருநாளும் ஒரு நல்ல குளியல் கொடுங்கள், நன்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

susha
susha
susha
susha
susha
susha

 

Leave a Comment