“பாக்கியலட்சுமி” சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சுசித்ரா – ஒரு நாளைக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

விஜய் டிவியில் பலவிதமான கதைகளுடன் சூப்பர் ஹிட் சீரியல்களில் மிக முக்கியமான சீரியல் என்றால் பாரதிகண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர், ராஜாராணி சீசன் 2 போன்ற சீரியல்கள் டாப் இடத்தை வகிக்கின்றன. இதனையடுத்து தற்போது டாப் லிஸ்டில் பாக்கியலட்சுமி தொடரும் உள்ளன.  இந்த தொடர் குடும்பம் மட்டும் இல்லத்தரசிகள் மிகவும் விரும்பி பார்க்கப்படும் சீரியல் ஆகும்.

ஒரு படிக்காத பெண், குடும்பம் மற்றும் வெளியில் அவர் படும் கஷ்டங்கள் மற்றும் வீட்டில் உள்ளவர்கள் அவரை மதிக்காமல் இருத்தல் போன்ற பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த கதை உருவாகி வருகிறது. இந்த தொடரில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா இந்த கதாபாத்திரத்தில் மிகவும் வெகுளி தனமாக நடித்து வருகிறார்.

இதனால் அவரை ஏமாற்றும் அவரது கணவன் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கின்றனர். இது போன்ற சில சீக்ரெட் எல்லாம் தற்பொழுது தெரிய வருவருகிறது போன்ற காட்சிகளுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கின்றன. மேலும் இந்த தொடரில் தற்போது ராதிகா கதாபாத்திரத்திற்கு பிக் பாஸ் சீசன் 4 ரேஷ்மா நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடித்து வந்த ஷீலாவின் கதாபாத்திரம் முடிவடைந்த நிலையில் அவர் தற்பொழுது பாக்கியலட்சுமி தொடரில் ரேஷ்மாவின் தாயாக நடித்து வருகிறார். இப்படி சுவாரசியமாக ஓடிக்கொண்டிருக்கும் இதன் தொடர் சென்ற வாரம் கூட  டிஆர்பி யில் முதலிடத்தில் வகித்தது.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிப்பதற்காக ஒரு நாளைக்கு 9000 சம்பளமாக வாங்குகிறார் சுசித்ரா. மேலும் இந்த சீரியலில் எழிலுக்கு ஜோடியாக நடித்து வரும் ரித்திகா ஒரு நாளைக்கு 4600 சம்பளமாக வாங்குகிறார் என்ற செய்தியும் தெரியவந்துள்ளது.

Leave a Comment