சுசித்ராவை பற்றி மிகவும் மோசமாக கேள்வி கேட்ட ரசிகர்.! முன்னாள் கணவர் கொடுத்த நெத்தியடி பதில்.!

0

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இந்த நிகழ்ச்சி ஆறு வாரங்களை கடந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இதில் ரேகா சுரேஷ் சக்கரவர்த்தி,வேல்முருகன் வெளியேறிவிட்டார்கள்.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தவர் பாடகி சுசித்ரா. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளே வந்ததும் உங்களைப் பற்றி என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதுமட்டுமில்லாமல் பாலாவுடன் சுசித்ரா நட்பாக இருப்பது ஷிவானிக்கு பிடிக்கவில்லை என்பது போல் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுசித்ராவின் முன்னாள் கணவரான கார்த்திக் சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ரசிகர் ஒருவர் இப்போ பிக்பாஸ் மீம்ஸ் பார்க்கும்போது ரொம்ப ஹேப்பியா இருக்கீங்களா என்று கிண்டலாக கேட்டுள்ளார்.

அதை பார்த்த சுசித்ராவின் முன்னாள் கணவர் பதிலளிக்கும் விதமாக என்னுடைய முன்னாள் மனைவியை பற்றி நான் எப்போதும் உயர்வாக நினைத்து பாசமாக தான் இருக்கிறேன் உங்கள் யாருக்கும் அவரைப்பற்றி தெரியாது தெரிந்தது போல் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என கூறியுள்ளார்.