எங்க அப்பா நடித்ததில் இந்த திரைப்படத்தை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.! சுருதிஹாசன் வெளிப்படை பேச்சு

0

வாரிசு நடிகையாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாகவும் இசையமைப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சுருதிஹாசன். இவர் கமலஹாசனின் மகளாக சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த வகையில் இவர் நடிப்பில் தனுஷுடன் இணைந்து நடித்திருந்தார் 3 திரைப்படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை தந்தது.

இத்திரைப்படத்தை தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களையும் தந்து வந்தார். அந்தவகையில் தமிழில் எந்த அளவிற்கு பிரபலமடைந்த உள்ளாரோ அதே அளவிற்கு தெலுங்கிலும் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். எனவே தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் ஒரு பேட்டியில் நல்ல கதை இருந்தால் மட்டுமே எந்த திரைப்படமாக இருந்தாலும் நடிப்பேன் அதற்கு காரணம் தன்னுடைய அப்பா என்றும் தெரிவித்து இருந்தார். அவ்வகையில் கமலஹாசனும் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரை படத்தின் கதை மற்றும் கதாபாத்திரம் இரண்டையும் பார்த்து தேர்ந்தெடுத்த பிறகு தான் ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆவாராம்.

அந்தவகையில் கமல்ஹாசனும் வித்தியாசமான கதாபாத்திரம் உள்ள பல திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து உள்ளா.ர் இதன் மூலமே தற்போது வரையிலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சுருதிஹாசன் நல்ல கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே திரைப்படங்களில் நடிப்பேன் என்று கூறியதால் இயக்குனர்களும் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே சுருதிஹாசனை அணுகுகிறார்கள்.

sruti hassan 1
sruti hassan 1

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது லாக் டவுன் என்பதால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சுருதிஹாசன் தொடர்ந்து ரசிகர்களிடம் லைவ் சட்டில் பேசுவது மற்றும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவது என மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களிடம் உரையாடும் பொழுது ரசிகர் ஒருவர் உங்கள் அப்பா கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்களில் என்ற திரைப்படத்தை உங்களுக்கு பிடிக்கும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த சுருதிகாசன் அபூர்வ சகோதரர்கள் மற்றும் விருமாண்டி போன்ற திரைப்படங்கள் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். அதோடு அடுத்தடுத்து ஸ்ருதிஹாசன் நடிப்பில் திரைப படங்கள் வெளியாக உள்ளதால் மிகவும் உற்சாகமாக இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.