நடிகை ஸ்ருதிஹாசன் தமிழில் பல படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமாகி அதைத்தொடர்ந்து தற்போது தெலுங்கு, ஹிந்தி போன்ற திரைப்படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஹீரோயினாக நடித்து வருகிறார்.
ஸ்ருதிஹாசன் பிரபல முன்னணி நடிகரான உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகள் ஆவார். நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பு மட்டுமல்லாது மாடலிங், இசை அமைப்பது, பாட்டு பாடுவது என அனைத்து திறமையும் கொண்டவர்.
ஸ்ருதிஹாசன் மைக்கேல் கார்சேலை என்பவரை காதலித்து வந்தார். ஆனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே இருந்த காதல் முடிவடைந்தது.
மேலும் அந்த காதல் முறிவடைந்ததை தொடர்ந்து தற்போது பிரபல டூடுல் கலைஞரான சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார். மேலும் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் அவ்வப்போது இணையதளத்தில் வெளிவந்து கொண்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து தற்போது சாந்தனுவின் 35வது பிறந்தநாளை முன்னிட்டு இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றினை ஸ்ருதிஹாசன் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வைத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.

