தீபாவளி போல் கொண்டாடப்பட்ட நடிகை ஸ்ருஷ்டி டாங்கே பிறந்தநாள்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

shrushti-dangee-4
shrushti-dangee-4

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெருமளவு கவனிக்கப்பட்ட ஒரு நடிகை என்றால் அது நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தான். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழில் ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடிப்பார் என்று நினைத்த நிலையில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே  நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்த அதுமட்டுமில்லாமல் அதிக அளவு போட்டோஷுட் பக்கமும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். என்னதான் இருந்தாலும் இவர் தமிழில் முதன்முதலாக அறிமுகமானது என்னவோ யுத்தம் செய் என்ற திரைப்படத்தின் மூலம் தான்.

இந்த திரைப்படத்தில் இவருக்கு மிகவும் சிறந்த கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே ரசிகர்களை கவரும் வண்ணம் அமைந்தது அதிலும் ஒரு பாடல் இன்றும் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் ஏப்ரல் ஃபூல், மேகா, எனக்குள் ஒருவன், டார்லிங், நேருக்கு நேர், கத்துக்குட்டி, புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம், வருசநாடு  போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அதன் பிறகு இவர் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவும் இல்லை வாய்ப்புகளும் இவருக்கு கிடைக்கவில்லை

இந்நிலையில் தற்போது எப்படியாவது விட்ட இடத்தை பிடித்து விட வேண்டும் என்ற காரணத்தினால் அடிக்கடி சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது மட்டுமில்லாமல் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

shrushti dangee-3
shrushti dangee-3

அந்த வகையில் நமது நடிகைக்கு தற்போது 30 வயது எட்டியுள்ளதை தொடர்ந்து பிறந்த நாள் கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு உள்ளது அப்போது கேக் வெட்டும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமில்லாமல் ரசிகர்கள் இது என்ன தீபாவளி பண்டிகையா என கிண்டல் அடித்து வருகிறார்கள்.

shrushti dangee-2
shrushti dangee-2