இந்த சினிமா பிரபலங்கள் தான் அவர்கள்.? ஆனால் எனக்கு..! முக்கிய சினிமா பிரபலங்களை குறிவைத்து அடிக்கப்போகும் ஸ்ரீரெட்டி.!

srireddy
srireddy

srireddy target cinema celebraties :நடிகை ஸ்ரீரெட்டி சில மாதங்களுக்கு முன்பு தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பலரும் தன்னை தவறாக பயன்படுத்திக் கொண்டு பட வாய்ப்பு தரவில்லை என பெரும் குற்றச்சாட்டை வைத்தார் அதுமட்டுமில்லாமல் அரைநிர்வாண போராட்டத்தையும் நடத்தினார்.

பின்பு தன்னை தவறாக பயன்படுத்திக் கொண்ட ஒவ்வொரு நடிகர் மற்றும் இயக்குனர்களின் பெயரை வெளியிட்டு தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவையும் அலற விட்டார், அப்பொழுது பல நடிகர் மற்றும் இயக்குனர்கள் எங்கே நமது பெயர் அடிபட்டு விடுமோ என பயந்து கொண்டு வாலை சுருட்டி வைத்திருந்தார்கள்.

நடிகை ஸ்ரீரெட்டி பின்பு சென்னையில் குடியேறினார், சென்னையிலும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தன்னைப் பயன்படுத்திக் கொண்டு எஸ்கேப் ஆனா பல முக்கிய பிரபலங்களின் பெயர்களை சுட்டிக்காட்டினார்.

இப்படி அடிக்கடி ஏதாவது சர்ச்சையை கிளப்பி வந்த ஸ்ரீரெட்டி கடந்த சில வாரங்களாகவே எந்த ஒரு பெரிய சர்ச்சையையும் கிளப்ப வில்லை. அந்த வகையில் தற்பொழுது நீண்ட நேர வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவேற்றினார்.அந்த வீடியோ தான் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

அந்த வீடியோவில் டோலிவுட்டில் போதைப்பொருள் மற்றும் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் அதிகம் இருப்பதாகவும் காவல்துறை தனக்கு பாதுகாப்பு தந்தால் சம்பந்தப்பட்ட முக்கிய பிரபலங்களின் பெயர்களையும் அவர்களை வெளி உலகத்திற்கு கொண்டுவரத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் ரகுல் பிரீத் சிங்கை பற்றி ஸ்ரீரெட்டி கூறியதாவது, போலீஸ் கஸ்டடியில் ரகுல் பிரீத் சிங்கை விசாரித்தால் அவரைப் பற்றிய பல உண்மைகள் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்றும் கூறியுள்ளார், போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் இரவு பார்ட்டி நடத்தும் நட்சத்திர விடுதிகள் பற்றியும் அவர் பேசியுள்ளார்.

மேலும் ஸ்ரீ ரெட்டி கூறியதாவது பார்ட்டியில் சர்வசாதாரணமாக போதைப்பொருளை பயன்படுத்துகிறார்கள் எனவும் அதை நடிகைகளுக்கும் கொடுத்து அவர்களை பாலியல் கொடுமை செய்து விடுவார்கள் எனவும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் சுஷாந்த் சிங் தற்கொலையை சரியான முறையில் கையாண்டு வருவதாக பாஜக அரசை பாராட்டியுள்ளார் ஸ்ரீரெட்டி.