actress sridevi daughter look like sridevi photo viral: நடிகை ஸ்ரீதேவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம் , தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து வந்தவர். ஒரு காலகட்டத்தில் ஸ்ரீதேவி ரஜினி, கமல் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர்.
அதன்பிறகு பாலிவுட் பக்கம் சென்று அங்கும் பல திரைப்படங்களில் நடித்து வந்தார், இந்த நிலையில் ஸ்ரீதேவி மறைந்து விட்டார் என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நடிகை ஸ்ரீதேவி பிரபல நட்சத்திர ஹோட்டலில் மாரடைப்பால் இறந்துவிட்டார் என அனைவருக்கும் தெரியும்.
இந்த நிலையில் ஸ்ரீதேவிக்கு தனது மகளை நடிகையாக ஆக்க வேண்டும் என்பதுதான் ஆசை, அந்த ஆசையை ஜான்வி கபூர் நிறைவேற்றியுள்ளார்.
ஜான்வி கபூர் தடக் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவின் மூலம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார், கொரோனா காலகட்டத்தில் சினிமா மற்றும் படப்பிடிப்புகள் அனைத்தும் முடங்கி கிடந்ததால் கடந்த சில மாதங்களாகவே ஓவியங்களை வரைந்து வெளியிட்டு வருகிறார் ஜான்வி கபூர்.
அதேபோல் சமூகவலைதளத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நடிகை ஸ்ரீதேவி போலவே உடை அணிந்து புதிய போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் அதிக லைக்ஸ்களையும் பெற்று வருகிறது.




