5, 10 நபர்கள் கிடையாது கிட்ட தட்ட 25 பிரபலங்களிடம் ஏமாந்துட்டேன்.! அவுங்க எல்லாரும்… உண்மையை சொன்ன ஸ்ரீரெட்டி.!

0
sri-reddy
sri-reddy

கடந்த சில வருடங்களாகவே சமூக வலைதள பக்கங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே வரும் நடிகைகளில் ஒருவர்தான் ஸ்ரீ ரெட்டி தனக்கு பட வாய்ப்புகள் தருவதாக கூறி பல முன்னணி நடிகர்கள்,இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்னை ஏமாற்றி விட்டதாக அவ்வப்பொழுது சர்ச்சையை கிளப்பிக் கொண்டே இருந்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்,ராகவா லாரன்ஸ்,விஷால்,ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் மீது அடுக்கடுக்கான புகார்களை இவர் தெரிவித்திருந்தார் இவர் சொன்னதை வைத்து பார்த்த பிரபலங்கள் ஸ்ரீ ரெட்டி விளம்பரத்துக்காக தான் இப்படி செய்து வருவதாக கூறி வந்தனர்.

அதேபோல் தற்பொழுதும் ஸ்ரீ ரெட்டி அளித்துள்ள பேட்டி ஒன்றில் ஒரு சில தகவல்களை கூறியுள்ளார் அதில் நான் ஆடை இல்லாமல் அரைகுறையாக போராட்டம் நடத்தினேன் அதோடு சரி அன்னைக்கே எல்லாம் முடிஞ்சு போய்விட்டது எனது அம்மா முன்பு கூட ஆடை மாற்ற தயங்கும் நான் அன்று அத்தனை பேர் முன்பு அரைகுறை உடையில் போராட்டம் செய்தேன்.

அதிலிருந்து என் அம்மா,அப்பா,தம்பி யாரும் என்னிடம் பேசுவதில்லை அதனாலே நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்.மேலும் இவர் கிட்டதட்ட 25 பேர் கிட்ட ஏமாந்ததாகவும் அவர்கள் எல்லாம் சினிமாவில் மிகப்பெரிய நடிகர்கள்,தயாரிப்பாளர்கள்,எழுத்தாளர்கள், இயக்குனர்கள் என்றும் கூறியுள்ளார்.

sri reddy
sri reddy

அது மட்டுமல்லாமல் கதைக்கு தேவை என்றால் மட்டுமே நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஆடை அணியுங்கள் ஆனால் இசை வெளியீட்டு விழா,போட்டோஷூட்க்கு எல்லாம் அப்படி செய்யாதீங்க எனவும் என்னை நினைச்சா எனக்கே மிகவும் அவமானமாக இருக்குது என்று ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளதாக இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.