செவனாண்டி பெத்த மகளா இவ… சேலையில பார்த்ததும் விழுந்துட்டேன்.! வைரலாகும் ஸ்ரீதிவ்யாவின் புகைப்படம்

Sri Divya: பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஸ்ரீ திவ்யா. நடிகை ஸ்ரீ திவ்யா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரிலீஸ் ஆகி 10 ஆண்டுகளை கடந்திருக்கும் நிலையில் இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஸ்ரீதிவ்யா. இந்த படத்தில் போஸ் பாண்டி கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சிவனாண்டி கதாபாத்திரத்தில் சத்யராஜும் காமெடியில் கலக்கினர்.

அப்படி லதா பாண்டி கேரக்டரில் நடித்த ஸ்ரீதிவ்யாவிற்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மிகப்பெரிய வெற்றியினை கொடுத்தது. இந்த படத்தின் வெற்றினை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து காக்கி சட்டை படத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்து அளவிற்கு வெற்றினை தரவில்லை.

பிறகு விஷாலுடன் மருது, கார்த்தியுடன் காஷ்மோரா, ஜிவி பிரகாஷ் உடன் பென்சில் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யா ரெமோவில் சிவகார்த்திகேயனுடன் சின்ன கேமியோ ரோல் நடித்திருந்தார். இவ்வாறு தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்தாலும் ஸ்ரீதிவ்யாவிற்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பிறகு சொல்லும் அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை.

 

sri divya
sri divya

இதன் காரணமாக ஸ்ரீ திவ்யா வேறு யாருடன் இணைந்து நடித்தாலும் பொருத்தமாக இல்லை என்றும் சிவகார்த்திகேயன் உடன் நடித்தால் மட்டுமே பத்து பொருத்தமும் பக்காவாக இருப்பதாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் 2வில் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

sri divya 1
sri divya 1

இப்படிப்பட்ட நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யா சமீபத்தில் சேலை அணிந்து செல்பி மற்றும் சேரில் சாய்ந்து கொண்டும் செம க்யூட்டாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் ஸ்ரீதிவ்யாவை வர்ணித்து கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.